சென்னைக்கு கொள்ளிடத்திலிருந்து குடிநீர்
சென்னை:
கொள்ளிடம் ஆற்றிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு வருகிற 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல்நாட்டவுள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டத்தை சமீபத்தில் ஜெயலலிதா வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந் நிலையில் மேலும்ஒரு குடிநீர் திட்டத்திற்கு வருகிற 14ம் தேதி ஜெயலலிதா அடிக்கல் நாட்டவுள்ளார்.
காவிரி ஆற்றில் கொள்ளிடத்திலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் இந்த திட்டத்தின் கீழ், கொள்ளிடம் பகுதியில் 6 ராட்சதகிணறுகள் தோண்டப்படவுள்ளன. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சேத்தியாத் தோப்புக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
அங்கு ஏற்கனவே உள்ள புதிய வீராணம் திட்டக் குழாயுடன், கொள்ளிடம் திட்டக் குழாய் இணைக்கப்படுகிறது. பின்னர்கொள்ளிடத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் புதிய வீராணம் குழாய்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்படும்.
இந்தத் திட்டத்திற்காக கொள்ளிடத்திலிருந்து சேத்தியாத்தோப்பு வரை 102 கிலோமீட்டர் தொலைவுக்கு ராட்சத குழாய்கள்அமைக்கப்படவுள்ளன. கொள்ளிடம் திட்டம் மூலம் 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு வரப்படும்.
இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது. ஜெயலலிதா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications