ஜெயலலிதா அரசுக்கு வைகோ திடீர் புகழாரம்!
ஈரோடு:
சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார். அத்தோடு தமிழக அரசையும் அவர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வைகோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த அணியில் முக்கியத்துவம் இழந்துவருகிறார்.
சன் டிவியில் வைகோ இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார். மதிகவும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் குறித்த ஒருசெய்தி கூட சன் டிவியில் ஒளிபரப்பாவதில்லை.
இந்தப் பின்னணியில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசையும், காவல் துறையையும் புகழ்ந்து பேட்டி கொடுத்துள்ளார் வைகோ.ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நலை படு நிேர்த்தியாக உள்ளதாக தெரிவித்தார்.
வைகோ கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாக பேணிப் பாதுகாத்துவருகின்றனர்.
மதச்சார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால் இதை பிளவுபடுத்தபாஜகவினர் முயற்சிக்கிறார்கள்.
ஜெயேந்திரர் கைதை நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால் பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் இதைமதச்சாயம் பூசி கலகத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.
அவர்களது முயற்சி தமிழகத்திலும் பலிக்கவில்லை, வடக்கேயும் பலிக்கவில்லை. ஜெயேந்திரர் கைது இந்துக்களுக்கு எதிரானநடவடிக்கையாக இந்துக்கள் நினைக்கவே இல்லை. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது மிகச் சரியான நடவடிக்கைதான். இதற்காக தமிழகஅரசைப் பாராட்டுகிறேன்.
இந்த வழக்கு விசாரணையை வெளி மாநிலத்திற்கு மாற்றத் தேவையில்லை. தமிழக காவல்துறை இதைச் சரியான முறையில்தான்கையாண்டு வருகிறது என்றார் வைகோ.
வைகோவின் இந்த திடீர் அதிமுக ஆதரவு பேட்டி திமுக தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியை உடைக்கும் நோக்கத்தில் தான் உளவுத்துறையின் புலியான அலெக்ஸாண்டரை அந்தத் துறையின் டிஜிபியாக்கினார்முதல்வர் ஜெயலலிதா. வைகோவின் பேட்டியைப் பாராத்தால் அலெக்ஸாண்டரின் வேலைகள் பலனளிக்கத் தொடங்கிவிட்டதாகவேதெரிகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications