எம்.எஸ்ஸுக்கு ஜெ, கருணாநிதி நேரில் அஞ்சலி
சென்னை:
மறைந்த இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இன்று நேரில்அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் நேற்று இரவு மரணமடைந்த எம்.எஸ்.சுப்புலட்சமியின் உடல் கோட்டூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதா அமைச்சர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர் வெளியிட்ட இரங்கற் செய்தியில், உலகம் ஒரு சிறந்த பாடகியையும்,சிறந்த பெண்மணியையும் இழந்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை தனது மனைவி தயாளு அம்மாளுடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.உடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் சென்றிருந்தார்.
கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதையில்,
பூமி குளிரப் பொழிந்து கொண்டிருந்த
இசை மழை ஓய்ந்து விட்டது.
காற்றிலே வரும் கீதம்;
காற்று நின்றாலும், கீதம்
ஒலித்துக் கொண்டே இருக்கும்
என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன்,முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசிய அளவிலும், உலக அளவிலும் கர்நாடக இசையைப் பரப்பி சாதனை படைத்தவர்எம்.எஸ். என்று கூறியுள்ளார்.
தொழிலதிபரும், எம்.பியுமான எம்.ஏ.எம். ராமசாமியும் எம்.எஸ். உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பல்வேறுஅரசியல் பிர முகர்கள், இசைக் கலைஞர்கள், திரையுலகினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி வருகின்றனர்.
ப.சிதம்பரம் இரங்கல்:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சங்கீதத்திற்குஎம்.எஸ். ஆற்றிய தொண்டு அவருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கும் சர்வதேச புகழைத் தேடித் தந்தது. அவரது குடும்பத்தாருக்கு எனதுஇரங்கல்கள் என்று கூறியுள்ளார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications