ராஜிவ் கொலை: சந்திராசாமிக்கு எதிராக ஆதாரம்
டெல்லி:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்திரா சாமிக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐதெரிவித்துள்ளது.
சந்திரா சாமி மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வெளிநாட்டில்வாழும் தனது பக்தர்களை சந்திக்க 2 மாதங்கள் அனுமதி தருமாறு கோரி சந்திரா சாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, ராஜீவ் கொலைக்காக புலிகளுக்கு சந்திரா சாமி நிதியுதவி செய்துள்ளார். இது தொடர்பானவிசாரணைகள் தொடர்வதால் சந்திரா சாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூறியது.
இந் நிலையில் இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ வழக்கறிஞர்கள், சந்திரா சாமிக்கு இந்தக் கொலைவழக்கில் தொடர்பிருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. அதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
நீதிபதியிடம் அதை ரகசியமாகத் தரத் தயார் என்றனர்.
இதையடுத்து வழக்கறிஞர்களை நீதிபதி தனது அறைக்குள் அழைத்துச் சென்றார் நீதிபதி ரவீந்தர் துடேஜா.
அப்போது அவரிடம் சிபிஐ அந்த ரகசிய ஆதாரங்களை சமர்பித்தது. இதனையடுத்து வெளிநாடு செல்ல அனுமதி கோரி சந்திரா சாமிதாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications