அதிரடிப்படை கொன்று குவித்த 66 பழங்குடியினர்!
சென்னை:
வீரப்பன் வேட்டையின் போது அப்பாவி பழங்குடியின மக்கள் 66 பேரை தமிழக மற்றும் கர்நாடகஅதிரடிப்படையினர் கொன்று குவித்ததாக சென்னையில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் தமிழ்நாடு சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் கழகம், பெங்களூர் மனித உரிமைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மனித உரிமை ஆர்வலர்கள், சத்தியமங்கலம் உள்ளிட்ட வீரப்பன் காட்டில் வசித்து வரும் பழங்குடியினமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட சிவனாண்டி என்பவர் கூறுகையில், தமிழகஅதிரடிப்படையினரும், கர்நாடக அதிரடிப்படையினரும் சேர்ந்து நடத்திய வீரப்பன் வேட்டையின்போது பலர்கொல்லப்பட்டனர்.
நான் மட்டும் 66 பேரின் உடல்களை காட்டுப் பகுதியிலிருந்து அகற்றியுள்ளேன். யாராவது சுட்டுக்கொல்லப்பட்டால் என்னைத்தான் அதிரடிப்படையினர் கூப்பிட்டு உடலை அப்புறப்படுத்தக் கூறுவார்கள்.இறந்தவர்கள் அனைவரும் அப்பாவிப் பழங்குடி மக்கள்தான் என்றார்.
வள்ளியம்மாள் என்ற பெண் கூறுகையில், வீரப்பன் எங்கே என்று கேட்டு இரு மாநில அதிரடிப்படையினரும்பெண்களை அதிகம் கொடுமைப்படுத்தியுள்ளனர். எங்களது ஆண்களிடமிருந்து தகவல் பெற வேண்டுமானால்எங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு மானபங்கப்படுத்துவது, கெடுப்பது என்று பாலியல் ரீதியானகொடுமைகளை ஆண்களின் கண் முன்பாகவே செய்வார்கள் என்றார்.
கூட்டத்தின் இறுதியில், தமிழக, கர்நாடக அரசுகள், வீரப்பன் வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குஉரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications