உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு தாக்கல்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று சங்கராச்சாரியார் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து இந்த மனுவை ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ளார். ஜெயேந்திரரின்ஒப்புதலுடன் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், போலீஸ் மற்றும் அரசுத் தரப்பு எடுத்து வைத்த வாதத்தை முழுமையாக ஆராயாமல், அப்படியே ஏற்றுக் கொண்டுசென்னை உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை தமிழக போலீசார் சமர்பிக்கவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் கூறியுள்ளார் ஜெயேந்திரர்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான பாலி நரிமன், ஹரிஷ் சால்வே, கிருஷ்ண குமார் ஆகியோருடன் ஜெயேந்திரரின்வழக்கறிஞர் கிருஷ்ணமணி கடந்த இரு நாட்களாக மிகத் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில் இன்று இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடிசெய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கிலும் அவரது ஜாமீன் மனுவை சென்னை செசன்ஸ்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications