முத்துகருப்பனுக்கு சிறை: உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
சென்னை நகர முன்னாள் காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பனுக்கு உயர்நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷ்னராக இருந்தபோது, நான் போலீஸ் தான்.. ஆனா, நான் ரெளடிக்கு ரெளடி என்று மார்தட்டிக் கொண்டு தடாலடியாக செயல்பட்டவர் முத்துக் கருப்பன். ஆனால், தாதா வீரமணியுடன் நல்ல நெருக்கம்வைத்திருந்தார்.
கடந்த 2001ம் ஆண்டு தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்தபோது எழும்பூரில் திமுக சார்பில் போட்டியிட்ட பரிதிஇளம்வழுதியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினார் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான் பாண்டியன்.
ஜான் பாண்டியன் நடத்திய ரத்தக் களறியில் பரிதி தரப்புக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டபரிதியையே கைது செய்தார் முத்துக் கருப்பன்.
ஜாமீன் கோரி பரிதி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடியானது. பின்னர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
அந்த ஜாமீனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்தனர். அதில், பரிதி போலீஸ் காவலில்அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து பரிதியின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவரை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் பரிதியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான் போலீஸ் காவலில் இருந்ததாககமிஷ்னர் முத்துக் கருப்பன் உயர் நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.இதையடுத்து பரிதி மீண்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தவறான தகவல் தந்த முத்துக்கருப்பன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத்தொடர்ந்தார் பரிதி. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் கமிஷ்னர் முத்துக்கருப்பன்,இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் ஆகிய இருவருக்கும் 7 நாள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் முத்துக்கருப்பன். அதை விசாரித்த நீதிபதிகள்பி.என்.அகர்வால், பி.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் முத்துக் கருப்பனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்குஇடைக்காலத் தடை விதித்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications