வீரப்பன்: விஜய்குமார் டென்சன்
தர்மபுரி:
வீரப்பன் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய எனக்கு எந்தவித ஆட்சேபனையும்இல்லை என்று தமிழக சிறப்பு அதிரடிப்படையின் டிஜிபி விஜயக்குமார் கூறியுள்ளார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தர்மபுரி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) சிவப்பிரகாசம், விசாரணைநடத்தி வருகிறார். இந்த விசாரணையில் விஜயக்குமார் கலந்து கொண்டு 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜய்குமார் பேசுகையில், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறும் புகார்களுக்குஎல்லாம் அதிரடிப்படையின் அதிகாரியான நான் பதில் தந்து கொண்டிருக்க முடியாது, அது எனது பதவிக்குகண்ணியம் தராது.
வீரப்பன் கும்பலை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படும் தகவல்களுக்கும் நான் பதில் தந்து கொண்டிருக்கமுடியாது. அரசாங்க அமைப்புகள், நீதித்துறை விசாரணையில் இதற்கெல்லாம் விளக்கம் கிடைக்கும்.
பொறுப்பற்ற முறையில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதற்கெல்லாம் நான் பதில்தந்து கொண்டிருக்க முடியாது.
வீரப்பனை உயிருடன் பிடித்திருக்கலாமே என்று பல முறை நீங்கள் (செய்தியாளர்கள்) கேட்டு விட்டீர்கள், நானும்பல முறை பதில் சொல்லி விட்டேன். இதெல்லாம் தேவையில்லாத யூகம், கணிப்பு.
வீரப்பன் கும்பலுக்கு சரணடைய வாப்புகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எங்களைத் தவறாக எடை போட்டனர். எல்லா வாய்ப்புகளையும் கொடுத்துத்தான் அவர்களைசுடும் முடிவை எடுத்தோம்.
வீரப்பன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா, இல்லையா என்பது உள்ளூர் போலீஸைச்சார்ந்தது. தனிப்பட்ட முறையில் அந்தக் கோரிக்கையை நாங்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றார்விஜயக்குமார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications