நான் அப்புவின் காதலி அல்ல: டாக்டர் அனுராதா
காஞ்சிபுரம்:
அப்புவுடன் தனக்கு தவறான முறையில் பழக்கம் எதுவும் கிடையாது என்று டாக்டர் அனுராதா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
அப்புவின் காதலி என்று கூறப்படும் டாக்டர் அனுராதாவிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுராதாபோலீசாரிடம் கூறியிருப்பதாவது:
நான் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்புவின் காதலி கிடையாது. அப்புவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்ட பின் தான் என் கணவர்என்னை விவாகரத்து செய்தார் என்று கூறுவது தவறு.
எங்கள் திருமணத்துக்கு பிறகு என் கணவருக்கு வேறோரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் ஒரு குழந்தையும் பிறந்தது. அதுஎனக்கு தெரிய வந்தபோது தகராறு ஏற்பட்டது. இதை தீர்க்க பஞ்சாயத்து செய்யுமாறு அப்புவின் உதவியை என் கணவர் நாடினார்.பஞ்சாயத்தை தனக்கு சாதகமாக முடிக்கும்படியும் கேட்டிருக்கிறார்.
அப்பு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். நான் அப்புவை சந்திக்க எனது பெற்றோருடன் சென்றேன். நான் என் தரப்பு நியாயத்தை 3,4 முறை அப்புவைச் சந்தித்து சொன்னேன். அப்புவிற்கு நான் சொன்னது உண்மை என தெரிந்தது.
எனவே என் கணவரை அடங்கிப் போகுமாறும், நான் சொல்வதைக் கேட்டு நடக்குமாறும் அப்பு சொன்னார். இதனால் என் கணவருக்குபயம் வந்து விட்டது. அப்பு மிரட்டி எழுதி வாங்கி விடுவாரோ என்று பயந்து நீதிமன்றத்துக்கு சென்று விட்டார். அதன் பிறகு எனக்குகணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்து விட்டது.
என் குடும்பத்திற்கு உதவி செய்தாரே என்றுதான் அப்பு பேசும்போதெல்லாம் நானும் பேசினேன். அவ்வப்போது தொலைபேசியில் நலம்விசாரிப்பார். அவ்வளவுதான். அவருடன் சேர்ந்து வெளியில் சுற்றியதோ, தவறான பழக்கமோக கிடையாது.
இதுவரை நான் சங்கர மடத்துக்கும் போனது கிடையாது. கடைசியாக அப்பு கடந்த மாதம் 16ம் தேதி என்னுடன் தொலைபேசியில்பேசினார். பெங்களூரில் இருந்து பேசுவதாகக் கூறினார். அதன் பிறகு அவரிடம் இருந்து போன் ஏதும் வரவில்லை.
அவ்வாறு அனுராதா கூறியுள்ளார்.
இவ்வாறு அனுராதா மழுப்பலான தகவல்களைத் தந்தாலும் கூட, விவகாரத்தாகிவிட்ட அனுராதாவை அப்பு தனது வளையத்தில்வைத்திருந்தான் என்பது போலீஸாரின் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications