ஜெ ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும்: ராமதாஸ்
அரக்கோணம்:
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை மக்களே அகற்ற முன் வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. இந்த ஆட்சியால் சாராய முதலாளிகளுக்கும், சினிமா அதிபர் 4, 5 பேருக்கும்தான்பயன் இருக்கிறது. மக்களே இந்த ஆட்சியை நீக்க முன்வர வேண்டும். நாங்களும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
அண்ணா முதல்வராக இருந்தபோது 40 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு அரசுக் கல்லூரியைத் தொடங்கி வைத்தார். தனது குறுகிய காலஆட்சியில் 67 அரசுக் கல்லூரிகளை அண்ணா தொடங்கி சாதனை படைத்தார்.
ஆனால், இப்போது அரசுக் கல்லூரிகளில் 1,500 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிவகங்கையில் 2,500 மாணவர்கள் படிக்கும்ஒரு கல்லூரியில் 4 ஆசிரியர்கள் மட்டும்தான் உள்ளனர்.
வீராணம் திட்டம் வெற்றி என்று ஜெயலலிதா கூறுகிறார். அப்படியென்றால் சென்னை நகரம் முழுவதும் தண்ணீர் தொடர்ந்து வருகிறதா?புதிய வீராணம் திட்டம் வெற்றி என்றால் புதிய விரிவாக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன்?.
வீராணம் ஏரி ஆண்டுக்கு 10 முறை நிரம்பும் என்று தவறான தகவல் கூறி, அந்தத் திட்டத்துக்கு ரூ.1,500 கோடியும் கிருஷ்ணா நீருக்குரூ.1,000 கோடியும் செலவு செய்த பின்பும், சென்னை குடிநீர் பிரச்சினை தீரவில்லை.
குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஆந்திர முதல்வரையோ, கர்நாடக முதல்வரையோ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மத்தியஅரசுக் கூட்டணியில் உள்ள நாங்கள் ஏதாவது பேச்சு நடத்தி நல்லதைச் செய்தால் அது தன்னால் தான் நடந்தது என்பார் ஜெயலலிதா.நாங்கள் பேசி அது பலனளிக்கால் போய்விட்டால், இவர்களால்தான் கெட்டது என்பார் அந்த அம்மையார்.
உள்ளூரில் தனி விமானத்தில் பறந்து பறந்து விரிவாக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதை விட, ஆந்திராவிற்கு சென்று 12 டி.எம்.சி.கிருஷ்ணா நீரைப் பெற ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் தம்பி ரகுவை விசாரித்து வருகிறார்கள். விஜயேந்திரரை எப்போது விசாரிப்பார்கள்? இந்தகொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை பிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் 54 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். இதில் 17 லட்சம் பேர் பெண்கள். இவர்களுக்காக தமிழக அரசு எந்தமுயற்சியும் எடுக்கவில்லை.
வருகிற சட்டசபைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து பாமக இடம் பெறும். திமுக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில்இடம் கேட்பது குறித்து இப்போது பிரச்சினை எழவில்லை, அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார் ராமதாஸ்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications