For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம், சமயபுரத்தில் ஜெ-சசி வழிபாடு!

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த ஜெயலலிதா அங்கிருந்து திருச்சி வந்தார். பின்னர் கார் மூலம்ஸ்ரீரங்கம் சென்றார்.

Jayalalitha and Sasikala

ஸ்ரீரங்கம் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா-சசிகலா

மாலை 4.45 மணிக்கு ஸ்ரீரங்கம் வந்த அவர் ரங்கநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அவருடன் தோழி சசிகலாவும் வந்திருந்தார்.முதல்வரை கோயில் ஜீயர் ஸ்ரீரங்கநாராயாண ஜீயர் வரவேற்று அழைத்துச் சென்றார். முதல்வருக்கு பூரண கும்ப மரியாதைஅளுக்கப்பட்டது.

கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் ஜெயலலிதா பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் அங்கிருந்து சமயபுரம் கிளம்பினார். மாலை6 மணிக்கு சமயபுரம் வந்த ஜெயலலிதா சுமார் 30 நிமிடங்கள் கோயிலில் இருந்தார்.

மாரியம்மனை தரிசித்த ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து மீண்டும் திருச்சிக்குத் திரும்பினார். முதல்வர் வந்து சென்ற நேரத்தில் சமயபுரம்கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இன்று காலை ஜெயலலிதா கிருஷ்ணகிரி செல்கிறார். அங்கு புதிய கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து பல்வேறு திட்டப் பணிகளைத்துவக்கி வைக்கிறார்.

தம்பிதுரை தந்துள்ள விளம்பரம்:

Jayalalitha and ADMK VIPs

திருச்சி விமான நிலையத்தில் முதல்வரை வரவேற்ற அதிமுக விஐபிக்கள்

ஜெயலலிதாவின் வருகையையொட்டி கிருஷ்ணகிரியில் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எங்கு நோக்கினும் வரவேற்புவளைவுகள், தோரணங்கள், அதிமுக கொடிகள் என நகரே வண்ணமயமாக உள்ளது.

இந்தப் பகுதியின் முக்கிய அதிமுக புள்ளியும் மீண்டும் அமைச்சர் பதவிக்காக தவம் இருந்து வருபவருமான தம்பிதுரை அம்மாவின்கவனத்தைக் கவர ஏராளமான பொருட்செலவில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

பத்திரிக்கைகளில் பக்கம், பக்கமாய் வண்ண விளம்பரங்கள் தந்து அசத்தியுள்ளார்.

அந்த விளம்பரத்தில் ஒரு வரி:

உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் சட்டம் ஒழுங்கினை காத்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும்நேர்மையின் திருவுருவமே.. புரட்சித் தலைவி அம்மா!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X