ஜெ. திடீர் மைசூர் பயணம்: சாமுண்டீஸ்வரியை தரிசித்தார்
மைசூர்:
கிருஷ்ணகிரி சென்ற முதல்வர் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தரிசனம்செய்தார். அவருடன் சசிகலாவும் சென்றார்.
கிருஷ்ணகிரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த ஜெயலலிதா அப்படியே ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார். லலித்மகால் அரண்மனையில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து காரில் சாமுண்டி மலைக்குச் சென்றார்.
மலை உச்சியில் உள்ள புகழ் பெற்ற சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்கு சசிகலாவுடன் சென்ற ஜெயலலிதாவை கோவில் நிர்வாகிகள் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்றனர்.
கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்ட ஜெயலலிதா, 2 வெள்ளி விளக்குகளையும், ஒரு சேலையையும் கோவிலுககு காணிக்கையாகவழங்கினார்.
கோவில் சார்பாக ஒரு சேலை, அம்மனின் புகைப்படம், பிரசாதம் ஆகியவற்றை கோவில் பூசாரிகள் ஜெயலலிதாவுக்குக் கொடுத்தனர்.
வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த ஜெயலலிதா நிருபர்களிடம் பேசுகையில், இது எனது தனிப்பட்ட பயணம். வீரப்பன்கொல்லப்பட்டதற்கு கர்நாடக அதிரடிப்படையின் ஒத்துழைப்பும் தான் காரணம் என்றார்.
இதையடுத்து ஹெலிகாப்டரில் பெங்களூர் வந்த ஜெயலலிதா அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications