சிங்கல், வேதாந்தத்துக்கு மூக்குடைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayendrar விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்காலையும், வேதாந்தத்தையும் சந்திக்க ஜெயேந்திரர் விரும்பவில்லை என்றும்அதனால்தான் அவர்களை சிறைக்குள் அனுமதிக்கவில்லை என்றும் வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் உயர் நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளார்.

ஜெயேந்திரரை சந்திக்க டிசம்பர் 1ம் தேதி அசோக் சிங்கால் வேலூர் சிறைக்கு வந்தார். அதேபோல தமிழக விஎச்பி தலைவர் வேதாந்தமும்சிறைக்கு வந்தார். ஆனால் இருவரையும் உள்ளே அனுமதிக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.

இதையடுத்து வேதாந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், சிங்காலும், நானும் ஜெயேந்திரரை சந்திக்கச்சென்றோம். ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.

நாங்கள் ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி வழங்குமாறு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் அவர்கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், அசோக் சிங்கால் மற்றும் வேதாந்தம் ஆகியஇருவரையும் சந்திக்க ஜெயேந்திரர் விரும்பவில்லை.

அன்றைய தினம் ஜெயேந்திரரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால், இவர்களைச் சந்தித்தால் தேவையில்லாத பிரச்சினைகள், சர்ச்சைள்எழும் என்று அவர்களை சந்திக்க விரும்பவில்லை என்று எங்களிடம் ஜெயேந்திரர் தெரிவித்துவிட்டார். இதனால்தான் இருவரையும்உள்ளே அனுமதிக்கவில்லை.

மேலும் ஒரு நாளைக்கு 3 பேர் மட்டுமே கைதிகளை சந்திக்க முடியும். ஏற்கனவே ஜெயேந்திரரை காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர்,மட நிர்வாகி நீலகண்டம் மற்றும் ஆடிட்டர் விஜி ஆகியமூன்று பேர் சந்தித்து விட்டதால், சிங்காலுக்கும், வேதாந்தத்திற்கும் அனுமதிஅளிக்கப்படவில்லை.

இதில் சிறை விதிகளின்படியே அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதில் அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை.

மேலும் ஜெயேந்திரரை சந்தித்து விட்டு வருபவர்கள் உண்மைக்கு மாறாக பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பதால், தேவையில்லாமல்எனக்கு அவப் பெயர் ஏற்படுகிறது. சிலரைப் பார்க்க ஜெயேந்திரர் விருப்பப்படவில்லை என்றாலும், சிறை அதிகாரிகள்தான் அனுமதிமறுத்து விட்டனர் என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு சிறை நிர்வாகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

இவர்களைச் சந்திக்கவே ஜெயேந்திரர் விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளதால் அசோக் சிங்கலுக்கும் வேதாந்தத்துக்கும் மூக்குடைப்புஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+