ஜெயேந்திரருக்கு போலீஸ் மனரீதியில் சித்ரவதை
சென்னை:
போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மனரீதியில் தன்னை போலீஸார் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக ஜெயேந்திரர்கூறியுள்ளார்.
தன்னைச் சந்தித்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழு எம்பிக்களிடம் இந்தத் தகவலை ஜெயேந்திரரர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் தலைவர் பல்பீர்சிங் புஞ்ச் கூறுகையில்,
சிறையில் ஜெயேந்திரரை நாங்கள் சந்தித்தபோது, போலீஸ் காவலில் தான் உடல்ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்றாலும் மனரீதியாகதுன்புறுத்தப்பட்டேன் என்று கூறினார்.
வாகுமூலம் தரவில்லை:
செல்போனில் பலரிடமும் பேசுமாறு தன்னை போலீசார் தூண்டியதாகவும், அதற்குத் தான் மறுத்துவிட்டதாகவும் ஜெயேந்திரர் தெரிவித்தார்.மேலும் குற்றத்தை ஒத்துக் கொண்டு எந்தவித ஒப்புதல் வாக்குமூலமும் தரவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜெயேந்திரர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். எல்லோருக்கும் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கட்டும், உண்மை என்ன என்பது தெரியவரட்டும் என்றும் கூறினார்.
போலீஸ் பீதி:
காஞ்சிபுரத்தில் ஒரு வித பீதியை போலீஸார் கிளப்பியுள்ளனர். மக்கள் பூட்டிய அறைக்குள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். ஜெயேந்திரர்மீது பல வழக்குகளைப் போட்டு குறைந்தபட்சம் ஒரு வழக்கிற்காவது ஆதாரங்களை உருவாக்க முயலுகின்றனர். மடத்தின் நிர்வாகிகளையும்போலீஸார் துன்புறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நேர்மையான விசாரணை நடைபெற வாய்ப்பில்லை. எனவே வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்என்றார் புஞ்ச்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications