சேது திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்றுதள்ளுபடி செய்தது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.
மத்திய அரசு, இந்தத் திட்டம் நல்ல திட்டம். கடல் வணிக வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் இந்தத் திட்டத்தைதடை செய்யக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்தது.
தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவர், மாநில அரசு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர்கள் இது தொடர்பாகபொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை. எனவே பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தி மத்தியஅரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, நீதிபதி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர்கள்கூறியிருப்பதாவது:
மனுதாரர் கருத்துக்கு முகாந்திரம் இல்லை. பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. அது முடியும் முன்பே நீதிமன்றத்திற்குவந்துவிட்டார்கள். இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அடிப்படை உரிமை பாதிப்பதாககூறுவதை ஏற்க முடியாது.
இத் திட்டம் தேசிய நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டம். இதை தடை செய்ய முடியாது. மனுதாரர் அவசரக்கோலத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். சேது சமுத்திரத் திட்டத்தால், இலங்கையை சுற்றி கப்பல்கள் செல்லும் தூரம் குறையும்.
நேரம், எரிபொருள் மிச்சமாகும். வர்த்தகம் பெருகும். வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியும். எனவே தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்பட6 மாவட்ட ஆட்சியர்களும் கருத்துக்கணிப்பு நடத்தி மத்திய அரசுக்கு விரைவாக அறிக்கை அனுப்ப வேண்டும்.
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை தடுக்கக்கூடாது. இந்தியா வலுவான நாடாக உருவாகும். இத் திட்டத்தால் ஏழைகள்பாதிக்கப்படமாட்டார்கள். எனவே மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications