வேலூர் சிறையில் துரைமுருகன் ஏற்படுத்திய பரபரப்பு!
வேலூர்:
சங்கராச்சாரியார் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்கு திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் திடீரென வந்ததால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜெயேந்திரர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திக்க நாடு முழுவதும்இருந்து விஐபிக்கள் வந்து போன வண்ணம் உள்ளனர். இந் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சிறைக்கு வந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் ஜெயேந்திரரைத்தான் சந்திக்க வந்திருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது.
துரைமுருகனும் நிருபர்களிடம் ஏதும் பேசிக் கொள்ளாமல் சிறைக்குள் சென்றார். அவருடன் அவரது தம்பி துரைசிங்கமும் சென்றார்.
சிறிது நேரத்தில் துரைமுருகன் வெளியே வந்தார். அப்போது அவரை பத்திரிக்கையாளர்கள் சூழந்து கொண்டனர்.
அப்போது பேசிய துரைமுருகன், திமுகவின் வேலூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். அவர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கத்தான் வந்தேன். இதில் நீங்கள் நினைப்பது மாதிரி வேறு விசேஷம் இல்லை என்று கூறி விட்டுச்சென்றார்.
இதையடுத்து நிருபர்களிடம் எழுந்த எதிர்பார்ப்பு சட்டென்று புஸ்வானம் ஆகிப் போனது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications