கூடுதல் நிதிக்கு மத்திய அமைச்சர்களே காரணம்: ப.சி.
சென்னை:
தமிழகத்திற்கு அடுத்த நிதியாண்டுக்கு கூடுதலாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களேகாரணம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் ப.சிதம்பரம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள்இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் செயல்படவில்லை என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறுவதில் சற்றும் உண்மையில்லை. தமிழக அரசுக்கு அடுத்து நிதியாண்டுக்கு மத்திய திட்டக் கமிஷன் கூடுதலாக ரூ. 1,000கோடி ஒதுக்கியுள்ளதே, அது யாரால்?
சேது சமுத்திர திட்டம் வந்துள்ளதே அது யாரால்? சென்னைக்குக் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதே, அதுயாரால்? இவை எல்லாம் மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களால்தான் வந்துள்ளன.
இதை தமிழக அரசு மறைக்க டியாது. உண்மையில் சொல்லப் போனால், சேது சமுத்திரத் திட்டத்திற்கும், கடல் நீரைக் குடிநீராக்கும்திட்டத்திற்கும் சில தடைகளை உருவாக்குவது தமிழக அரசுதான்.
மேலும், தமிழக அமைச்சரவையில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள், அவர்களில் யார் என்ன பொறுப்பை வகிக்கிறார்கள், அவர்கள்என்ன செய்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்குத் தெரியவில்லை. இதுதான் உண்மை என்றார் ப.சிதம்பரம்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications