ஐசிஐசிஐ: பணம் எடுத்த ஆதாரம் சிக்கியது!
காஞ்சிபுரம்:
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையினருக்கு ஐசிஐசிஐ வங்கியில் இருந்து பணம் தரப்பட்டது தொடர்பான முக்கியமான ஆதாரம்போலீசிடம் சிக்கியுள்ளது.
சங்கரராமனைக் கொன்ற கூலிப் படையினருக்கு, காஞ்சிபுரம் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து பணம் தரப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறிவருகிறது.
ஆனால் கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, காஞ்சி மடத்திற்கு ஐசிஐசிஐ வங்கியில்கணக்கு எதுவும் இல்லை என்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வங்கி ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், சங்கர மடத்தின் கீழ் வரும் கடிகாஸ்ரமம் அறக்கட்டளையின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 லட்சம் பணம் 2நாட்களில் எடுக்கப்பட்டது தொடர்பான முக்கிய ஆதாரம் போலீசிடம் சிக்கியுள்ளது.
கடிகாஸ்ரமம் அறக்கட்டளைக்கு சங்கர மட வளாகத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது. இந்த கணக்கிலிருந்துசங்கரராமன் கொலை செய்யப்பட்ட நாளில் ரூ. 5 லட்சம், போலி குற்றவாளிகள் 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ரூ. 10லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக் கணக்கில் இருந்து சென்னையில் உள்ள ஒரு காண்டிராக்டரின் பெயரில் இரண்டு செக்குகள் கொடுக்கப்பட்டதற்கானஆதாரமும் போலீஸ் வசம் சிக்கியுள்ளது.
இந்தப் பணம் காண்ட்ராக்டர் மூலம் கூலிப் படையினருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. இதற்கான ஆதாரமாக கொலைக் கும்பலின்வாக்குமூலம் உள்ளது.
தற்போது சங்கர மட வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் போலீஸார் கைப்பற்றிவிட்டனர். இந்தஆதாரத்தை ஜனவரி 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications