இந்திய உறவு: பலப்படுத்த மலேசியா விருப்பம்
டெல்லி:
இந்தியாவுடனான இரு தரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாக மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது பதாவி கூறினார்.
பதாவி 5 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் பேசிய பதாவி,
இந்தியாவுடன் அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவை பலப்படுத்தவும், விரிவுபடுத்தவும் மலேசியா விரும்புகிறது. அதற்கு எனதுஇந்தப் பயணம் துணை புரியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் மலேசிய பிரதமராகப் பதவியேற்ற பின்பு பதாவி முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருடன்மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சையீத் ஹமீத் அல்பர், தொழில்துறை அமைச்சர் சாமிவேலு உள்ளிட்ட உயர் நிலைக் குழுவும்வந்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங்கை பதாவி சந்தித்துப் பேசவிருக்கிறார்.
அப்போது இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதிக்க இருக்கிறார்கள். குறிப்பாக தீவிரவாதஅச்சுறுத்தல், ஐநா சபையை மாற்றியமைப்பது மற்றும் இராக் பிரச்சனை குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்,உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர்ஆகியோரை பதாவி சந்தித்துப் பேசுகிறார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி ஆகியோரையும் அவர் சந்திக்கிறார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications