அப்புவுக்காக தயாராகும் சென்னை, திருச்சி சிறைகள்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்பு வரும் 23ம் தேதி சென்னைசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளான்.
சங்கரராமன் கொலை வழக்குத் தவிர 2 ஆண்டுகளுக்கு முன் மந்தைவெளி பகுதியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் வழக்கிலும் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிலும் கூலிப் படையை அனுப்பிய முக்கிய குற்றவாளியாக அப்பு சேர்க்கப்பட்டுள்ளான். இந்த வழக்கு விசாரணைசைதாப்பேட்டை 23வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அப்புவை வரும் வரும் 23ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அன்று தான்சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் போலீஸ் காவல் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
இந் நிலையில் ஆடிட்டர் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் சில நாட்கள் அப்புவை தங்களது கஸ்டடியில் எடுக்க போலீசார்திட்டமிட்டுள்ளனர்.
மேலும் போலீஸ் காவல் எல்லாம் முடிந்த பின் அப்புவை வேலூர் சிறைக்குப் பதில் சென்னை மத்திய சிறை அல்லது திருச்சி, கடலூர்சிறைகளில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். காஞ்சிக்கு அருகில் உள்ள சென்னை சிறையில் தான் அவன் பெரும்பாலும்அடைக்கப்படுவான் என்று தெரிகிறது.
வருடத்துக்கு ரூ. 4 லட்சம் வரை இன்கம்டாக்ஸ் கட்டும் நபர் என்பதால் சிறையில் அப்புவுக்கு முதல் வகுப்பு தரப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
