தமிழர்களின் பாரம்பரிய பானம் கள்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் மாவட்டத்தில் நாடார்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடார் பேரவையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியாக போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் சேலம் மாவட்டத்தில்அவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டி ருக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படவேண்டும்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைப் போல இங்கேயும் கள் விற்க அனுமதிக்க வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள்கோரி வருகிறார்கள். அதிமுக அரசு இந்த பிரச்சினையில் அண்டை மாநிலங்களை பின்பற்றுவதில் என்ன சிரமம் இருக்கிறது என்பதுதெரியவில்லை.

அரசாங்கமே சாராயம் விற்றால், எங்கிருந்து வரும் கள்ளச் சாராயம்? என்பது இந்த அரசின் நவீன மதுவிலக்கு கொள்கைப் பிரசாரம்.சாராயத்தை விட கள் விற்பனையை அனுமதிக்கலாம். அது தமிழர்களின் பாரம்பரிய பானம். அதில் போதை உண்டு. ஆனால் அழிவில்லை.

கள் இறக்கவும், விற்கவும் அனுமதித்தால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் பெருகும்.

அண்மையில் விஸ்கி, பிராந்தி போன்ற சீமைச் சாராய வகைகளின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வால்மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் சாராய ஆலை அதிபர்களுக்கு கூடுதல் லாபமாக கிடைக்கப்போகிறது.

தமிழகத்தில் கணிசமாக வாழும் பனைமரத் தொழிலாளர்களும், தென்னை, பனை பயிரிடும் லட்சக்கணக் கான விவசாயிகளும் பயன்அடையும் வகையில் கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு ஏன் சிந்திக்கவில்லை?

அனைத்து சாராய கடைகளையும் மூடிவிட்டு அங்கே பதநீர் உள்ளிட்ட பனைப் பொருட்களின் விற்பனையை அரசு தொடங்கினால் தமிழகமக்கள் பயன்பெறுவார்களே? இதை அரசு ஏன் சிந்திக்கக்கூடாது? என்று கூறினார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு, மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் சேதுராமன்ஆகியோரும் நாடார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+