இந்தியும் வேண்டும்: பாஜக, சிபிஎம்
சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் மைல் கற்களில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியிலும் பெயர்கள் இடம் பெற வேண்டும்என்று பாரதீய ஜனதாக் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரியுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் இந்தியில் பெயர்கள் இடம் பெற்றிருப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புதெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில் இந்தியைத் திணிக்க கருணாநிதியும், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும்முயல்வதாக அவர் சாடியிருந்தார்.
ஜெயலலிதாவின் புகாரையடுத்து, மைல்கற்களில் உள்ள இந்திப் பெயர்கள் அகற்றப்பட்டு தமிழில் மைல்கற்கள் மாற்றப்பட்டுவருவதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். கருணாநிதி தனக்கே உரிய நையாண்டி பாணியில் ஜெயலலிதாவின் அறிக்கைக்குப் பதிலடிதந்தார்.
இந் நிலையில் மைல்கற்களில் இந்தியும் இடம்பெற வேண்டும் என்று பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்வலியுறுத்தியுள்ளன. பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கூறுகையில், தமிழகத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள்,புனிதத் தலங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வட இந்தியர்கள், பிறமாநிலத்தவர் அதிக அளவில் வருகின்றனர்.
அப்படியிருக்கையில், மைல் கற்களில் தமிழும், ஆங்கிலம் மட்டும் இருந்தால் சரியாக இருக்காது. இந்தியும் இடம்பெறவேண்டும். அப்போதுதான் வட இந்தியர்களுக்கு அது உதவியாக இருக்கும், தமிழகத்திற்கும் ஏராளமான வட இந்தியர்கள்அடிக்கடி வர வசதியாக இருக்கும்.
அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. இந்தியை திணிக்கக் கூடாது என்ற பெயரில் தமிழ்தெயாதவர்கள் மீது நாம் தமிழை திணிக்கக் கூடாது என்றார் இல.கணேசன்.
வரதராஜன் கருத்து:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்பயன்படுத்தவில்லை. மாற்ற மாநிலத்தவரும்தான் பயன்படுத்துகிறார்கள்.
எனவே மைல் கற்களில் தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியிலும் பெயர்கள் இடம் பெற வேண்டும். இந்தப் பிரச்சினையில்மத்திய அரசு தலையிட்டு இந்தியிலும் பெயர்கள் இடம் பெற வகை செய்ய வேண்டும் என்றார்.
ஆங்கிலம் வேண்டாம்: ராமதாஸ்
இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், மைல் கற்களில் தமிழ் மட்டும் இருந்தால் போதுமானது. ஆங்கிலம் கூடதேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் கருத்தைப் பொருத்தவரை, மைல் கற்களில் தமிழ்மட்டுமே இடம் பெற வேண்டும். ஆங்கிலமோ, இந்தியோ இங்கு தேவையில்லை.
அப்படியே ஆங்கிலம் தேவை என்று கருதினால், தமிழ் எழுத்துக்கள் பெரிதாகவும், ஆங்கில எழுத்துக்கள் சிறிதாகவும்இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications