அண்ணாநகர் ரமேஷ் வழக்கும் காஞ்சிக்கு மாற்றம்!!
சென்னை:
சென்னையில் 3 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட அண்ணாநகர் ரமேஷின் வழக்கு, ஜெயேந்திரர் மீதானவழக்குகளை விசாரித்து வரும் காஞ்சிபுரம் தனிப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம் அப்புவின் கிரிமினல் விவகாரங்களுடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினையும் கோர்த்து விட முயற்சிநடக்கிறது.
ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் (பினாமி என்று சொல்வோரும் உண்டு) ரமேஷ். அண்ணாநகரில் பெரிய வீட்டில் வசதியாக வாழ்ந்துவந்தவர்.
சாதாரண காண்டிராக்டராக தனது தொழிலைத் தொடங்கிய ரமேஷ் பின்னர் மிகப் பெரிய அளவில் வளர்ந்தார்.
2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் காண்டிராக்டர் தெய்வசிகாமணி என்பவர் சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தன்னை திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பரசுராமன், அண்ணா நகர் ரமேஷ், ரெளடி பங்க் குமார்ஆகியோர் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்து ரூ. 7 கோடி கொடுத்தால்தான் விடுவிப்போம் எனமிரட்டியதாக கூறியிருந்தார்.
இந்தப் புகாரையடுத்து பரசுராமன், ரமேஷ், மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன், ரெளடி பங்க் குமார்உள்ளிட்டோர் மீது கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ரமேஷிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர் போலீஸ்விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்ற போலீஸார்ரமேஷின் மனைவி காஞ்சனா மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
தான் போலீசாரிடம் ஆஜரானால் தன்னை மிரட்டிப் பணிய வைத்து ஸ்டாலினுக்கு எதிராக வாக்குமூலம் பெற முயற்சி நடக்கும் என்றுஅஞ்சியே ரமேஷ் தலைமறைவானதாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில்தான் ஜூலை 15ம் தேதி ரமேஷ் தனது மனைவி காஞ்சனா மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலைசெய்து கொண்டார். இதில் அவரது ஒரு வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருமங்கலம் போலீஸார் இதை தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தெய்வசிகாமணி கடத்தல் தொடர்பாக திமுக முக்கியப் புள்ளிகள் சிலர் குறித்த தகவல்களை போலீஸாரிடம் சொல்லரமேஷ் முடிவு செய்திருந்ததாகவும், இதை அறிந்து கொண்ட திமுக முக்கியப் புள்ளிகள்தான் ரமேஷை மிரட்டிதற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகப்பட்டனர்.
மனைவி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதற்காக ரமேஷ் மீது ஒரு வழக்கும், ரமேஷ் தற்கொலைசெய்து கொள்ளத் தூண்டுதலாக இருந்தவர்கள் மீது இன்னொரு வழக்கும் (கொலை வழக்கு) பதிவானது.
ரமேஷைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கும் பொறுப்புசிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை டி.எஸ்.பி. சத்ய நாராயணன் விசாரித்து வந்தார் (இவர் இப்போதுசங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் தனிப் படையில் இடம் பெற்றுள்ளார்).
ரமேஷ் தற்கொலை தொடர்பான விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.சில முக்கிய திமுக புள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதாகத்தெரிகிறது.
ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் 3 பேர் அவருடன் செல்போனில்பேசியுள்ளனர். அதில் ஒருவர் தாதா அப்பு என்பது தெரிய வந்தது. மற்ற இருவரில் ஒருவர் சைதாப்பேட்டையைச்சேர்ந்த திமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளி.
இந்தப் பிரமுகர் ரமேஷுடன் பலமுறை செல்போனில் பேசியதற்கான ஆதாரம் போலீஸ் வசம் சிக்கியது.இதையடுத்து ரமேஷ் வழக்கை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது சிபிசிஐடி. அப்புவை போலீஸார்விசாரணைக்கு அழைத்தனர்.
தான் ரமேஷின் நெருங்கிய நண்பர் என்றும், அந்த முறையில்தான் பேசினேன், மற்றபடி தற்கொலை செய்ய நான்அவரைத் தூண்டவில்லை என்று விசாரணையின்போது அப்பு தெரிவித்தார். இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திமுக புள்ளி மீது போலீஸாரின் சந்தேகம் பலமாக விழுந்தது. ஆனால் அவருக்கு எதிரானஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இப்போது அப்பு வலுவான வழக்கில் மாட்டியுள்ளதாலும், ரமேஷ் தொடர்பான பல மர்மங்களுக்கு அப்பு மூலம்விடை கிடைக்கலாம் என்ற நம்பிக்கை போலீஸாருக்கு வந்துள்ளது. இதனால் ரமேஷ் வழக்கை மீண்டும் தோண்டிஎடுத்து அதை தீவிரமாக விசாரிக்க போலீஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் தான் ரமேஷ் குடும்ப மர்மச் சாவு வழக்கை காஞ்சிபுரம் போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி கோவிந்த். இதன் மூலம்ரமேஷ் குடும்பத்தின் மரணத்தில் அப்புவுக்குத் தொடர்பிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
இதைடுத்து இன்று சென்னை வந்த பிரேம்குமார் தலைமையிலான தனிப் படை போலீசார் சிபிசிஐடிஅலுவலகத்துகுச் சென்று அண்ணாநகர் ரமேஷ் தொடர்பான வழக்கு விவரங்கள், ஆவணங்களைப் பெற்றுச்சென்றனர்.
ரமேஷ் குடும்ப மரண வழக்கில் அப்பு விசாரிக்கப்படும்போது கூடவே ரமேஷ்-ஸ்டாலின் தொடர்புகளையும் போலீசார் தோண்டி எடுப்பர்என்று தெரிகிறது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications