சுந்தரசே அய்யர் கைது: ஜனவரி 7 வரை சிறை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலையாளிகளுக்கு பல தவணைகளில் ரூ. 55 லட்சம் வரை கொடுத்ததாக சங்கர மட மேலாளர்சுந்தரேச அய்யர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜனவரி 7ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஜெயேந்திரர், அப்பு உள்ளிட்டவர்களை விட அதிகஅளவில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டவர் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர்தான். இதுவரை 13 முறை அவர்தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டார்.
சங்கர மடத்தின் சகல விவரங்களும் தெரிந்தவர் சுந்தரேச அய்யர். சங்கராச்சாரியாருக்கு ரொம்ப நெருக்கம்.இதனால் சங்கரராமனைப் போட்டுத் தள்ள போடப்பட்ட சதி, கொலையாளிகளுக்குப் பணம் போன விவரம்ஆகியவை அய்யருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று போலீசார் நம்பினர்.
இதனால் தான் அவரை வாரம் முழுவதும் வரவழைத்து விசாரித்தனர். ஆனால், ஒழுங்காக பதில் சொல்லாமல்மழுப்பியே வந்தார்.
இதையடுத்து 5 வங்கிகளின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது மடத்தின் பல்வேறுடிரஸ்ட்களின் கணக்குகளில் இருந்து சங்கரராாமன் கொலைக்கு முன்பும் பின்பும் பல தவணைகளாக வங்கிகளில்இருந்து ரூ. 55 லட்சம் வரை எடுக்கப்பட்டது உறுதியானது.
இந்த ஆதாரங்களை அய்யர் முன் வைத்த அதிகாரிகள் கேள்விகள் கேட்டபோது மென்று முழுங்க ஆரம்பித்தார்சுந்தரசே அய்யர்.
இந் நிலையில் நேற்று மாலையும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். வழக்கம் போல நடக்கும்விசாரணைதானே என்று அய்யரும் வழக்கம் போல காட்டு பங்களாவிற்கு கையில் வாட்டர் பாட்டிலுடன் வந்தார்.ஆனால், வழக்கத்தைவிட கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது.
வெள்ளிக்கிழமை மாலையில் போலீசார் இப்படி அய்யரை நீண்ட நேரம் விசாரித்தபோதே ஏதோ நடக்கப்போவதை நிருபர்களால் யூகிக்க முடிந்தது.
இந் நிலையில் இரவு 9.30 மணிவாக்கில் சங்கர மடத்தின் வழக்கறிஞர் கே.எஸ்.செல்லப்பா காட்டுப்பங்களாவிற்குள்ளிருந்து வெளியே வந்தார். விசாரணை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது,
மாலையில் விசாரணைக்கு அழைத்த போலீஸார் தற்போது சுந்தரேச அய்யரைக் கைது செய்துள்ளதாகதெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீது என்ன பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளதோ அதேபிரிவுகள்தான் சுந்தரேச அய்யர் மீதும் போடப்பட்டுள்ளன (அதாவது கொலை வழக்கு).
கூடுதலாக, கூலிப் படையினருக்கு ரூ. 55 லட்சம் வரை கொடுத்ததாக சுந்தரேச அய்யர் மீது புகார்சுமத்தப்பட்டுள்ளது செல்லப்பா.
கைது செய்யப்பட்ட அய்யர் காட்டு பங்களாவில் ஒரு அறையிலேயே நேற்றிரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டார்.இரவு முழுவதும் அவரிடம் ஜெயேந்திரர் குறித்து விசாரணை நடந்தது.
தன்னை போலீசார் கைது செய்துவிட்டதையடுத்து பல உண்மைகளை அய்யர் போட்டு உடைத்துவிட்டதாகத்தெரிகிறது. கொலை குறித்து அய்யருக்கு எல்லா விவரமும் தெரியும் என்கிறது போலீஸ்.
அவர் மீது கொலை வழக்கு (பிரிவு 302), கிரிமினல் சதித் திட்டம் (120 பி), கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டது(பிரிவு 34) ஆகிய மூன்று பிரிவுகளின் வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இன்று அய்யர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஜனவரி 7 வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கப்படும் அய்யரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்வார்கள் என்றுதெரிகிறது.
இதுவரை இந்த வழக்கில் ஜெயேந்திரரின் ஆரம்பித்து அப்பு வழியாக சுந்தரேச அய்யர் வரை 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அடுத்து இந்தப் பட்டியலில் சேர இருப்பது ரவி சுப்பிரமணியமும் அவரைத் தொடர்ந்து ரகுவும் என்கிறார்கள்.பட்டியல் அத்தோடு முடியாது என்றும் தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications