மீனம்பாக்கத்தில் ஏர் டெக்கான் அலுவலகம் சூறை
சென்னை:
டெல்லி செல்லவிருந்த தனியார் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வன்முறையில்இறங்கினர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக டெல்லிக்கு இன்று காலை 5.30 மணிக்கு ஏர்-டெக்கான் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்செல்லவிருந்தது. ஆனால் இந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று நள்ளிரவுக்கு மேல்வெளியிடப்பட்டது.
ஆனால், விமானம் ரத்தானது தெரியாமல் 140 பயணிகள் இன்று காலை விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர். விமானம் ரத்தானதகவலை முறையாகத் தெரிவிக்காதது ஏன் என்று கேட்டவாறு ஏர் டெக்கான் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உடனே தங்களுக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரினர். அதற்கு ஏர் டெக்கான் நிறுவன ஊழியர்கள் முறையாக பதில்சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகளில் பலர் வன்முறையில் இறங்கினர்.
ஏர் டெக்கான் அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்து எறிந்த பயணிகள், அங்கிருந்த தொலைபேசி சாதனங்களையும் வீசி எறிந்தனர்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏர் டெக்கான் நிறுவனத்தின் அலுவலகம் பயணிகளால் சூறையாடப்படுவது இது இரண்டாவதுமுறையாகும்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications