விசாரணைக்கு ஆஜாராக விஜயேந்திரருக்கு உத்தரவு!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை விசாரிக்கப்படாமல் இருந்து வந்த இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம்நாளை தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரை விஜயேந்திரரிடம் மட்டும் விசாரணை நடத்தப்படாமல் இருந்து வந்தது. சமீபத்தில் அவரது தம்பி ரகுவிடம் தனிப்படைபோலீஸார் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் விஜயேந்திரரையும் விசாரிக்க தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் எஸ்.பி.பிரேம்குமார் விஜயேந்திரருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில் விசாரணைக்காக நாளை காலை 11 மணிக்கு தனிப்படை முன் ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை விஜயேந்திரரின் வழக்கறிஞர் ரேவதி உறுதி செய்தார். நிருபர்களிடம் ரேவதி கூறுகையில்,
இந்த மாதம் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும் மாதம் என்பதால் மடத்தை விட்டு இளையவர் வெளியே வர முடியாது. இதனால் நாளைவிசாரணைக்குச் வருவது மிகவும் சிரமமான விஷயம் என்பதை போலீசாரிடம் தெரிவித்துள்ளோம். அதற்கு போலீசாரிடம் இருந்துஇன்னும் பதில் கிடைக்கவில்லை என்றார்.
இதற்கிடையே, காட்டுப் பங்களாவில் வைத்தே விஜயேந்திரரை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையின்போது சொர்ணமால்யா விவகாரம், பூக் கூடைக்குள் மடத்துக்குள் போன சிடிக்கள், பெண்கள் விடுதியில்விஜயேந்திரரின் தம்பி ரகு செய்த ராவடிகள், சங்கரராமன் கொலை விவகாரம், மடத்தின் மர்மச் சாவுகள், ரகுவின் குஜால் தொடர்புகள்உள்பட அனைத்து விஷயங்கள் குறித்தும் விஜயேந்திரரிடம் விசாாரிக்கப்படும் என்கிறது போலீஸ் தரப்பு.
இந்த விசாரணைகளின் இறுதியில் விஜயேந்திரர் மற்றும் அவரது தம்பி ரகுவும் கூட கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications