மீண்டும் கொந்தளிப்பு ஏற்படும்: வானிலை இலாகா
சென்னை:
சென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் 10 மீட்டர் உயரத்திலான ராட்சத அலைகளுடன் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படும்என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. கடலோரப் பகுதி மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்லுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக சென்னை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிகப் பெரியகடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந் நிலையில் மீண்டும் ராட்சத அலைகளுடன் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது. இந்தகடல் அலைகள் 10 மீட்டர் உயரத்திற்கு இருக்கும் என்றும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே கடலோரப் பகுதிகளில்இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரத்தில், மீண்டும் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இன்றிரவு அல்லது நாளை மீண்டும் நிலநடுக்கம் என்று ஒரு வதந்தி பரவியது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.
இந் நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவர் அதனை மறுத்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
சென்னையில் இன்று காலை ஏற்பட்டது நில அதிர்வுதான். நில நடுக்கம் அல்ல. இந்தோனேஷியாவில்தான் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன்தாக்கம்தான் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் எதிரொலித்தது.
எங்களுக்குக் கிடைத்த தகவல்படி மீண்டும் நில அதிர்வு வர வாய்ப்பில்லை. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications