For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீட்பு பணியில் முழு வீச்சில் ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Rescue operationகடல் கொந்தளிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெட்ராஸ் என்ஜீனியரிங் குரூப் படைப்பிரிவின் ஒரு தொகுதியினர் நாகப்பட்டினத்திற்கு பெங்களூரில் இருந்து ராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கல்பாக்கம் பகுதிகளில் ஜம்மு காஷ்மீர் ரைபில்ஸ் படையின் ஒரு பிரிவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடலோரக் காவல் படையைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்களும், இரண்டு டோர்னியர் விமானங்களும் தமிழகக் கடலோரப் பகுதிகளில்தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை 25 பேரை கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர்கள்காப்பாற்றியுள்ளன.

கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 7 கப்பல்கள் வங்காள விரிகுடாவில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடற்படையைச் சேர்ந்த ரஞ்சித், கிர்ச், ரன்விஜய், ஷரப், குக்ரி மற்றும் கஞ்சர் ஆகிய கப்பல்களும் தமிழக கடலோரப் பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடல்நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையே பல்வேறு தன்னார்வ தொண்டர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1,200 என்.எஸ்.எஸ்.தன்னார்வலர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரண முகாம்கள்:

கடல் கொந்தளிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சிஐடி நகர், மைலாப்பூர், கோபாலபுரம், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் உள்ளநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேன்கள் மூலம் 2 லட்சம் உணவுப் பொட்

டலங்கள் கொண்டு வரப்பட்டுவிநியோகிக்கப்படுகின்றன.

சடலங்களை இலவசமாக எரிக்கவோ, புதைக்கவோ மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

11 கடலோர மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

60 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறை:

இந் நிலையில் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு ஒரு கட்டுபாட்டு அறையை டெல்லியில் ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கட்டுப்பாட்டு அறை முழுநேரமும் இயங்கும். இதன் தொலைபேசி எண்கள்: 23092923, 28093054, 23092885 மற்றும் 23092763.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X