இலங்கையில் 13,000 பேர் பலி: தத்தளிக்கும் வட-கிழக்கு
கொழும்பு:
கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட சுனாமி பேய் அலைகளுக்கு இலங்கையில் 13,000 பேர் வரை பலியாகிவிட்டனர் என்று தெரிய வருகிறது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வட கிழக்கு இலங்கையில் தான் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்துபல்லாயிரக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வட கிழக்கு இலங்கையும் கொழும்புவும் மிக தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்பாணத்தில் மட்டும் 2,000 பேர்பலியாகியுள்ளனர்.
ஆனால், தென் இலங்கையிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களிலும் மீட்புப் பணிகளில் கவனமும் ஆர்வமும்செலுத்தி வரும் இலங்கை அரசு தமிழர் பகுதிகளை புறக்கணித்து வருவதாகத் தெரிகிறது.
முல்லைத்தீவில் இருந்து சுமார் 772 உடல்களும், தலையாடி பகுதியில் சுமார் 600 உடல்களுமே மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதிகளிலும்செம்பியன்பட்டிலும் சுமார் 2,000 பலியாகியுள்ளனர்.
மேலும் வட கிழக்குப் பகுதியில் 2,000 பேரைக் காணவில்லை. புலிகளின் கடற்படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத்தொலைக்காட்சியான ரூபவாகினி கூறியுள்ளது. மேலும் புலிகளின் 2 முகாம்களும் கடல் அலைகளால் முழுமையாகசேதமடைந்துவிட்டதாகக் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்காணக்கானோர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு விடுதலைப்புலிகள் நிர்வாகம் சிறப்பு முகாம்களை அமைத்து உதவி வருகிறது.
இதற்கிடையே இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்களுடன் அனுப்பப்பட்ட கடற்படைக் கப்பல் நேற்று கல்லி துறைமுகத்தைஅடைந்தது. அதே போல இன்னொரு கப்பல் திரிகோணமலையை அடைந்துள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து ராணுவ சரக்கு விமானம், 6 ஹெலிகாப்டர்களில் மருத்துவக் குழுக்களும் மருந்துப் பொருட்களும்கொழும்புவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications