அதிமுக ரூ. 1 கோடி: ஜெ. ரூ. 25 லட்சம் உதவி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமி கடல் அலைகளால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா அதிமுகவின் சார்பில் ரூ. 1கோடியையும், தனது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ. 25 லட்சத்தையும் வழங்கியுள்ளார்.
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரண நிதிக்கு நிதியளிக்க விரும்புவோரின்வசதிக்காக கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.
தமிழக மீட்பு மற்றும் நிவாரணத் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைஅமைக்கப்பட்டுள்ளது.
பொது நிவாரண நிதிக்கு நிதியளிக்க விரும்புவோர் அல்லது பிற வகையான உதவிகளைச் செய்ய விரும்புவோர்044-28593990 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல்களைப்பெறலாம்.
சென்னைக்கு வெளியே இருப்போர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை அணுகி ஆட்சியர்களிடம்உதவிகளை அளிக்கலாம்.
இதேபோல, மாநில சிவில் சப்ளைஸ் நிறுவன அலுவலகங்களையும் அணுகி உதவிகளை அளிக்கலாம்.













Click it and Unblock the Notifications