ரகு கைது: சென்னை சிறையில் அடைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை ஜனவரி 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் உத்தமராஜன் உத்தரவிட்டார். இதையடுத்துரகு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரையும் சேர்த்து சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ரகுவிடம் போலீசார் பல முறை விசாரணை நடத்தினர். ஆனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சங்கர மடத்தின்மருத்துவமனையில் சேர்ந்த ரகு, தனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த அப்பன்டிசைடிஸ் பிரச்சனைக்காக குடல் வால் நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.
இதனால் இவரது கைது தள்ளிப் போனது. இந் நிலையில் அப்புவும் ரவி சுப்பிரமணியமும் போலீசாரிடம் மாட்டிக் கொள்ள, அவர்கள் தந்தவாக்குமூலத்தில் இந்தக் கொலையில் ரகுவின் பங்கு குறித்து விரிவாகத் தெரியவந்தது.
கொலைக்கு பண ஏற்பாட்டைச் செய்தது, பண பட்டுவாடாவை முன்னின்று செய்தது எல்லாம் ரகு தான் என்று உறுதியானது. இதையடுத்துநேற்றும் ரகுவை விசாரணைக்கு வரவழைத்த போலீசார், சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு இரவில் கைது செய்தனர்.
அப்போது ரகுவின் அண்ணனும் இளையவரின் இன்னொரு சகோதரருமான பிரபாகரும் உடனிருந்தார்.
கூலிப் படைக்கு பண பட்டுவாடா செய்ததாக ரகு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது பாலியல் வழக்குகளும்பாயக் கூடும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications