அருணா கொலை: 5 பேரிடம் விசாரணை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் நேற்று காலை வாக்கிங் சென்றபோது அருணாவையும் அவரது கல்லூரியில் பணியாற்றும்பொன்ராஜ் என்பவரையும் 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் சாய்த்தது.
அப்போது அருணாவுடன் வாக்கிங் சென்ற டாஸ்மார்க் மதுக்கடை ஊழியரான சாக்ரடீஸ் என்பவர் தப்பியோடிவிட்டார். அவரிடம்கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய்கள் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது. கொலையாளிகள் 3 பைக்குகளில் வந்துள்ளனர். அவர்கள் ஒரு செல்போனைதவறவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தத் துப்புக்களை வைத்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
வெட்டுவதற்கு பயன்பட்ட அரிவாளும் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. கூலிப் படையை வைத்துத் தான் அருணாவை யாரோகொலை செய்துள்ளனர். இதற்கு முன் பகை காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அருணாவின் உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு அப்பல்லோவில் உடல் பதப்படுத்தப்பட்டது. சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளது.
அருணாவின் 3வது மகனான தமிழ்வாணன் அமெரிக்காவில் உள்ளார். அவர் சென்னை வந்து கொண்டிருக்கிறார். நாளை அவர் வந்தவுடன்இறுதி நிகழ்ச்சிகள் நடக்கும்.
முன்னதாக தென்காசி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அருணாவின் உடலுக்கு நெல்லை மாவட்ட திமுக செயலாளர்ஆவுடையப்பன் உள்பட பல கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications