புத்தாண்டு பரிசு: பத்திரமாய் திரும்பி வந்த 20 சிறுவர்கள்
கீழ்புதுப்பட்டி:
![]() |
பாண்டிச்சேரி அருகே கடல் அலைத் தாக்குதலுக்குப் பின் காணாமல் போன 20 சிறுவர்கள் பத்திரமாகத் திரும்பி வந்துள்ளனர்.
கடலூர்-பாண்டிச்சேரி அருகே உள்ளது இந்த கடலோர கிராமமான கீழ்புதுப்பட்டி. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனாமி தாக்கலில் பலர்உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயினர். இதில் இந்த ஊரைச் சேர்ந்த 20 சிறுவர்களும் அடங்குவர்.
சுனாமி தாக்கியபோது கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இந்த சிறுவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுபலியாகிவிட்டதாகக் கருதப்பட்டது. இவர்கள் அனைவரும் மீனவர்களின் குழந்தைகள்.
ஆனால், கடல் அலைகள் பயங்கரமாக வருவதைக் கண்ட இந்த சிறுவர்கள் நிலப் பரப்பை நோக்கி ஓடி வந்துள்ளனர். கடல் நீரும் விரட்டிக்கொண்டு வர சாலையை அடைந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஒரு பஸ்சில் ஏறியுள்ளனர். கடல் நீர் வருவதைக் கண்ட டிரைவர் பஸ்ஸை விரட்டிச் சென்று 25 கி.மீ. தூரத்துக்குஅப்பால் கிழினூர் என்ற ஊரில் போய் தான் நிறுத்தியுள்ளார். அந்த ஊரில் இறங்கிய இந்தச் சிறுவர்கள் ஊருக்குத் திரும்ப முடியாமல்தவித்துள்ளனர்.
அதற்குள் எல்லா பக்கமும் கடல் நீர் புகுந்து தங்களது ஊரும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதை அறிந்த சிறுவர்கள் சொந்த ஊருக்குச் செல்லமுயல, அவர்களை கிழினூரிலேயே பத்திரமாக தங்க வைத்துள்ளனர் அந்தப் பகுதியினர்.
கீழ்புதுப்பட்டி கிராமம் பெரும்பாலும் அழிந்துவிட்டதால் இவர்கள் உயிரோடு இருப்பதை யாருக்குத் தெரிவிப்பது என்று தெரியாமல்தவித்துள்ளனர்.
இந் நிலையில் புதன்கிழயைன்று பாண்டிச்சேரியைத் தொடர்பு கொண்டு 20 பேரும் பத்திரமாக இருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர்.இன்று இந்த 20 பேரையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிய கிருஸ்துவக் கல்வித் துறையின் ஒருங்கிணைப்பாளரானடாக்டர் சம்பத்குமார் பத்திரமாக கீழ்ப்புதுப்பட்டிக்கு அழைத்து வந்தார்.
கீழ்புதுப்பட்டியில் பகுதியில் பல ஆண்டுகளாக மாலை நேரத்தில் இலவசமாக கல்வி போதித்து வரும் சம்பத்குமார் இப்போது இச்சிறுவர்களை அவர்களது பெற்றோரைத் தேடி ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இச் சிறுவர்களில் பெரும்பாலான குடும்பத்தினர் முகாம்களில் பத்திரமாக இருப்பதாகத் தெரிகிறது.
இலவச புத்தகங்கள்: ஜெ. அறிவிப்பு
இதற்கிடையே சுனாமி தாக்குதலில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவ, மாணவியருக்கு இலவச பாட நூல்கள் வழங்கப்படும் எனமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில, சுனாமி தாக்குதலின்போது தமிழக கடலோர மாவட்டங்களில் வசித்து வந்தோர் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகள் தங்களது பாடப் புத்தகங்கள், சீருடைகளை இழந்துள்ளனர்.
எனவே, மாணவ, மாணவியரின் படிப்பு கெடாமல் இருப்பதற்காக அவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள்ஆகியவற்றை உடனே இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
தமிழ்நாட்டு பாட நூல் நிறுவனம் சார்பில் இந்த உதவி செய்யப்படும. தமிழக கடலோரத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 1ம் வகுப்பு தல்12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
இதேபோல சுனாமி தாக்குதலினால் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய புதிய குடும்ப அட்டைகள் வழங்கஉத்தரவிட்டுள்ளேன். அதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் தாற்காலிகமாக மாற்று குடும்ப அட்டைகளை வழங்க அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இப் பகுதி பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் இந்த மாதம் கூடுதலாக 10 லிட்டர் மண்ணெண்ணை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளார் ஜெயலலிதா.













Click it and Unblock the Notifications