பழைய ஆடைகளை நிராகரிக்கும் மீனவர்கள்
கடலூர்:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகை மாவட்ட மீனவர்கள், தங்கள் பால் அன்பு கொண்டோர் தயவு செய்து பயன்படுத்திய, பழைய ஆடைகளைஅனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
சுனாமி அலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினரும்,பயன்படுத்தியஆடைகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். இப்போது இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
கடலூர், நாகை மாவட்ட மீனவர்கள், பழைய ஆடைகளை வாங்க மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் நியாயமாகவே உள்ளது. சுனாமிவருவதற்கு முன்பு நாங்கள் நன்றாகத்தான் வாழ்ந்து வந்தோம். எங்களது குழந்தைகளுக்கு ரூ. 500க்குக் குறையாமல் உடைகள் வாங்கிக் கொடுப்பதுதான்எங்களது வழக்கம்.
எனவே எங்களுக்கு தயவு செய்து பழைய, பயன்படுத்திய ஆடைகளைக் கொடுக்க வேண்டாம். அது எங்களது மனதைப் புண்படுத்துகிறது. எங்களுக்கு உதவநினைக்கும் சகோதர, சகோதரிகளின் அன்பை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் எங்களது உணர்வுகளையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்என்கிறார்கள் மீனவர்கள்.
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகன்னாதன் இதுகுறித்துக் கூறுகையில்,
மீனவர்கள் கூறுவதில் தவறில்லை. அவர்களது உணர்வுகளை மதிக்க வேண்டும். மனரீதியாக அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் எதையும்எடுத்துக் கூறி விளங்க வைக்க முடியாது . எனவே புதிய ஆடைகளையே தானமாக வழங்குமாறு தற்போது நன்கொடையாளர்களை நாங்கள் வலியுறுத்திவருகிறோம் என்றார்.
மீனவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட பல தன்னார்வ நிறுவனங்கள் பழைய ஆடைகளுக்குப் பதிலாக புதிய ஆடைகளை வழங்கத் தொடங்கியுள்ளன.தற்போது புதிதாக 5,000 டீசர்ட்டுகள், 6,000 சேலைகள், 4,000 வேட்டிகள், 2,000 குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவை வந்துள்ளன.
இதற்கிடையே ஏற்கனவே வந்து மலை போல குவிந்துள்ள பழைய ஆடைகளை வீணடிக்க விரும்பாத அதிகாரிகள், அவற்றை வறுமைக் கோட்டுக்குக் கீழேஉள்ளவர்கள், அநாதை இல்லங்கள், காப்பகங்களில் வசிப்போருக்கு கொடுக்க முடிவு செய்து வயது வாரியாக உடைகளைப் பிரித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications