ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகங்கள்: ஜெ. உத்தரவு
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதலால் பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அனாதைகளாகி விட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளை பாதுகாப்பதற்காகநாகை, கடலூர், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் உடனடியாக குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
சுனாமி அலைகள் தாக்குதலால் கடும் பாதிப்படைந்துள்ள கடலூர், கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள்ஒரே நாளில் அனைத்து உறவுகளையும் இழந்து அநாதைகள் ஆகியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவரும் தற்போது நிவாரணமையங்களில் மற்றவர்களுடன் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இக்குழந்தைகளின் நலனுக்காக தனி காப்பகங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாகஅவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சுனாமி அலை தாக்குதலால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட அனைத்து குழந்தைகளையும் தமிழக அரசே தத்தெடுத்துக் கொள்ளும்.இதற்காக கடலூர், நாகப்பட்டனம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் உடனடியாக குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கஉத்தரவிட்டுள்ளேன்.
இந்தக் காப்பகங்கள் ஒவ்வொன்றிலும் 100 குழந்தைகள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்படும். இந்த மையங்களில் குழந்தைகள்விளையாடுவதற்கான பொம்மைகள், அவர்களுக்கான உடைகள், உணவு, பொழுதுபோக்கு வசதி, மனதால் பாதிக்கப்பட்ட அவர்களுக்குஆலோசனைகள் கூற கவுன்சலர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
குழந்தைகள் பராமரிப்புக்காக பயிற்சி பெற்ற ஆயாக்களும் இங்கு பணியில் அமர்த்தப்படுவர். இதுதவிர ஒவ்வொரு குழந்தைகளின்பெயரிலும் தலா ரூ. 1லட்சம் நிரந்தர வைப்புக் கணக்கில் வைக்கப்டும். 18 வயதானவுடன் அந்தப் பணம் குழந்தைகள் கைக்கு வரும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications