பொடா நீதிபதி ராஜேந்திரன் திடீர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே உள்ள பூந்தமல்லி பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

பொடா வழக்குகளை விசாரித்து வந்தவர் நீதிபதி ராஜேந்திரன். இவருக்கு வயது 57. நேற்று இரவு இவருக்கு திடீரென்று மாரடைப்புஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை ராஜேந்திரன் மரணமடைந்தார். ராஜேந்திரனுக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டவர்கள்மீதான பொடா வழக்குகளை ராஜேந்திரன் விசாரித்து வந்தார். வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்குபொடா மறு ஆய்வுக் குழு முன்பு உத்தரவிட்டது.

அதை ஏற்று தமிழக அரசு வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பொடா நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் நீதிபதி ராஜேந்திரன்அதை ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+