சுனாமி பேரழிவு: குடியரசு தின கொண்டாட்டங்கள் ரத்து?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
கடல் கொந்தளிப்பால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தினத்தைக் கொண்டாடுவதா வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசுஆலோசித்து வருகிறது.
கடந்த 26ம் தேதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் இந்தியாவில் மட்டும் 12,000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். இந் நிலையில் வருகிற 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நிருபர்களிடம் பேசுகையில், இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலந்துபேசி அதன் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.













Click it and Unblock the Notifications