தாய், தந்தையை இழந்து அனாதைகளான 350 பிஞ்சுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

children lost parents to tsunami in TN

சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தமிழக அரசு தத்தெடுக்க உள்ளது. அநாதரவாகிவிட்ட இந்தக் குழந்தைகளின் விவரம்சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாநிலத்தில் சுமார் 10,00,000 லட்சம் பேர் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 4 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலியான சுமார் 12,000 பேரில் 3ல் ஒரு பகுதியினர் குழந்தைகள். நாகப்பட்டிணத்தில் பாதிக்குப் பாதி குழந்தைகள் தான்பலியாகியுள்ளனர்.

கடலூர் பகுதியில் ஒரு பக்கம் கடல் இன்னொரு பக்கம் முட் புதர்கள் என்றிருந்த மீனவர் குப்பங்களில் குடிசைகள் கடலால் தூக்கிவீசப்பட்டன. இதில் குப்பங்களில் வசித்தவர்கள் முட் புதர்களில் சிக்கி உடல் எல்லாம் முட்களால் துளைக்கப்பட்டு பலியாகியுள்ளனர். இங்குபல உடல்கள் முட்களால் சிதைக்கப்பட்டே மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே பெற்றோர், உறவுகளை இழந்து அனாதையாகிவிட்ட குழந்தைள் குறித்து கணக்கெடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.சென்னையில் எந்தக் குழந்தையும் பெற்றோர் இருவரையும் இழந்து அநாதையாகவில்லை.

ஆனால், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 183 குழந்தைகள் தாய், தந்தையரை இழந்துள்ளன. இவர்கள் அங்குள்ள 50 முகாம்களில்தங்கியுள்ளனர். இதையடுத்து இவர்களை அரசு தத்தெடுத்துக் கொண்டு, நாகப்பட்டிணத்திலேயே இந்தக் குழந்தைகளுக்கு நிரந்தர வாழ்வுமுகாம் அமைத்துத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 120 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களும் அரசால் தத்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்குகடலூரிலேயே நிரந்தர முகாம் அமைக்கப்படவுள்ளது.

அதே போல கன்னியாகுமரியில் 45 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களுக்கு குமரியிலேயே நிரந்தர இல்லம்அமைக்கப்படவுள்ளது.

இதுவரை பெற்றோரை இழந்த 348 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களை விருப்பம் உள்ளவர்கள் தத்தெடுக்கலாம்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாரும் தத்தெடுக்காதபட்சத்தில் அரசே இவர்களுக்கு உணவு, கல்வி, உடைகளை வழங்கும்.

மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தந்தை அல்லது தாயை இழந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+