கடமையை மறந்த அரசு ஊழியர்கள், வெட்டி கலெக்டர் ரமேஷ் சந்த்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

Medical camp in Nagai

தமிழகத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முழு வீச்சில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டுள்ளன.

நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டாலும் கீழ்மட்ட அரசு ஊழியர்கள் தங்களது கடமையை சரிவரச் செய்யத் தவறிவிட்டனர்.

தஞ்சாவூர் கலெக்டர் ராதாகிருஷ்ணன் நாகப்பட்டிணம் மாவட்ட பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தொண்டு நிறுவனங்கள்உதவியுடன் மிகச் சிறப்பாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதே போல கடலூர் கலெக்டரான ககன்தீப் சிங் பேடியும் கடுமையாக உழைத்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.இவர்களுக்கு அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லை. இதனால் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்களைகையில் வைத்துக் கொண்டு இந்த கலெக்டர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், நாகப்பட்டிணம் மாவட்ட கலெக்டரான வீரசண்முக மணியில் செயல்பாடுகள் போதிய அளவில் திருப்தி தரவில்லை. பலஇடங்களை இவர் இன்னும் போய்க் கூட பார்க்கவில்லை. இதனால் இவர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.

அதே போல கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரான ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் சந்த் மீனா சுத்த வேஸ்ட் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.மகா மட்டமான நிவாரணப் பணி நடப்பது இங்கு தான்.

இந்த மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை முன்னின்று நடத்துவது தனியார் அமைப்புகளும், சமூக நல ஆர்வலர்களும் தான்.

பஞ்சாபைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடலூர் கலெக்டர் ககன்தீப் சிங்க்கு நல்ல தமிழ்ப் புலமை உண்டு. இதனால் பிரச்சனையைஉடனடியாக உணர்கிறார். தமிழில் நன்றாகவே பேசி பிறர்க்கும் நிலைமையைப் புரிய வைக்கிறார்.

அதேபோல தஞ்சாவூரை விட்டுவிட்டு நாகப்பட்டிணத்திலேயே டேரா போட்டுவிட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன், பெரும்பாலான நேரம்நிவாரணப் பணிகளுக்காக ஓடிக் கொண்டே தான் இருக்கிறார். இவரது சேவையை இப் பகுதியினர் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.

ஆனால், நம் ஊர்க்காரரான வீரசண்முகமணியும் ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் சந்துக்கும் அவசர காலத்துக்கு உதவாத கலெக்டர்கள் என்றநல்ல பெயரை சம்பாதித்துள்ளனர். ரமேஷ் சந்தை பேசாமலா ராஜஸ்தானுக்கே திருப்பி அனுப்பிவிடலாம். தமிழும் புரியவில்லை, தனதுமாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஊர்களும் இவருக்குத் தெரியவில்லை.

வேலு கொடுத்த சூடு:

மாநில அமைச்சர்களுக்கு இணையாக தமிழகத்ததைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தான் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்.

கடலூரில் உள் பகுதி கிராமங்களில் மீட்புப் பணியில் சுணக்கத்தைக் கண்ட மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு,செல்போனிலேயே அதிகாரிகளைப் பிடித்து வாட்டி எடுத்தார். இதன் பின்னரே அங்கு அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.

ஐஏஎஸ் அதிகாரியான வேலு இப் பகுதியில் துணை கலெக்டராகப் பணியாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும்நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

குமரியில் ராசா:

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராசா குமரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளை தனது துறை அதிகாரிகளைக் கொண்டுதீவிரப்படுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ரமேஷ் சந்திடம் அமைச்சர் விளக்கம் கேட்க, சொல்லத் தெரியாத கலெக்டர் பேப்பரில் யாரோஎழுதிக் கொடுத்ததைப் படிக்க, அவரைத் திட்டித் தீர்த்துவிட்டுப் போனார் ராசா.

இதே போலவே மாநில அமைச்சர்களும் ஆங்காங்கே முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரமாக்கி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானஇடங்களில் அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாதால் பணிகள் அரசின் வேகத்துக்கு இணையாக நடக்கவில்லை.

அந்தமானுக்கு சேட்டிலைட் போன்கள்:

இதே போல அந்தமானில் மீட்புப் பணிகளை உள்துறை இணையமைச்சர் ரகுபதி பார்வையிட்டபோது தொலைத் தொடர்பு கட்டமைப்புமுழுவதும் அழிந்து போனதை உணர்ந்து உடனே தகவல்துறை அமைச்சர் தயாநிதியை அலெர்ட் செய்ய, அடுத்த விமானத்திலேயே 20சேட்டிலைட் போன்கள் பறந்தன.

இதன் பின்னரே அந்தமானில் நிலைமை வெளியுலகுக்குத் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+