மீட்புப் பணியில் பெங்களூர், சென்னை சாப்ட்வேர் என்ஜினியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Dead bodies lying in Nagapattinam

சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெங்களூர், சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்கள் பலர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மைசூரில் இருந்து கூட பல மாணவர் குழுக்கள் தமிழகம் வந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டிணத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பெங்களூர், சென்னையின் பல சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களும் தங்களுக்குள்ளேயே நிதி திரட்டி நிவாரணப் பொருட்களைவாங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் வினியோகித்து வருகின்றனர்.

இண்டியா இன்போ-தட்ஸ்தமிழ் நிறுவனத்தில் இருந்தும் 7 பேர் கொண்ட சிறிய குழு நாகப்பட்டிணத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதே போல பெங்களூரில் இருந்து பல மருத்துவக் குழுக்களும் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் மக்களுக்கு இலவச சிகிச்சையும்,மருந்துகளையும் வழங்கி வருகின்றனர்.

பூம்புகாரில் பாமக மருத்துவ முகாம்:

இதற்கிடையே பூம்புகாரில் பாமக சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் இதனைத் தொடங்கி வைத்தார்.

தாமதமாக நிவாரணப் பணி தொடக்கம்:

இந் நிலையில் சீர்காழி அருகே திருமுல்லைவாசல், பழையாறு பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகவும் தாமதமாகவே தொடங்கப்பட்டதாகஅப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுனாமி அலை தாக்கி, 5 நாட்களுக்குப் பின்பே, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இங்கு வந்ததாக பழையாறைச் சேர்ந்த துரைமணிஎன்பவர் கூறினார்.

விவேக் ஓபராய் பிரார்த்தனை:

இந்தி நடிகர் விவேக் ஓபராய், தனது ஆன்மீக குரு சித்தானந்த் சரஸ்வதி சுவாமிகளுடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவானம்பட்டினம்கிராமத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார்.

மேலும் அந்த கிராமத்தை தத்தெடுக்கவும் விருப்பம் தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதியை வாங்க வேண்டும்என்று அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+