ஏற்காடு: தேனிலவுக்கு வந்தவர் சாவு
ஏற்காடு:
தேனிலவுக்கு ஏற்காடு வந்த கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் குளியலறையில் இறந்து கிடந்தார்.அவரது மனைவி மயக்கமான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெல்காமைச் சேர்ந்தவர் சந்தோஷ் ஹெக்டே. இவருக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் டிசம்பர்30ம் தேதி ஹெக்டேவும், அவரது மனைவி ஷீத்தலும் தங்களது நண்பர்களின் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு தேனிலவுக்கு வந்தனர்.
இவர்கள் அனைவரும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினர். டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டிஅனைவரும் நிறைய மது அருந்தினர்.
நள்ளிரவில் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அதன் பின்னர் ஜனவரி 1ம் தேதி காலை வெகு நேரமாகியும் ஹெக்டே தம்பதிதங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகிகள், மாற்றுச் சாவி மூலம் அறைக் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போதுஹெக்டேகுளியலறையில் இறந்து கிடந்தார். ஷீத்தலும் அருகே மயங்கிக் கிடந்தார்.
இதைத் தொடர்ந்து ஷீத்தல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் தேறியுள்ளது.
அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
ஆனால், கடுமையான போதையில் குளியறையில் வைத்து ஷவரில் குளித்தபடியே இருவரும் செக்சில் ஈடுபட முயன்றதாகவும், அப்போதுஹெக்டேவுக்கு மூச்சு முட்டியதாகவும் அவர் மயங்கி சரிந்ததாகவும், பின்னர் தனக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் ஷீத்தல்போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஹீட்டரில் வாயு கசிவு:
இதற்கிடையே குளியலறையில் பொறுத்தப்பட்டிருந்த கேஸால் இயங்கும் வாட்டர் ஹீட்டரில் இருந்து கசிந்த வாயு காரணமாகவேஹெக்டே உயிரிழந்தாகக் தெரியவந்துள்ளது.
ஹீட்டர் அதிக சூடாகி அதிலிருந்து கார்பன் மோனாக்சைட் வாயு வெளியானதாகவும் கூறப்படுகிறது. இதை சுவாசித்தே அவர்உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications