ஆலடி அருணா: சரண்டரான போலி!
சென்னை& நெல்லை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் ஒருவர்சரணடைந்துள்ளார். ஆனால், இவன் உண்மையான குற்றவாளி இல்லை என்று நெல்லை காவல்துறையினர் கூறுகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த ஆலடி அருணா கடந்த டிசம்பர் 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப்போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுவரை 25 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
இந் நிலையில் அருணா கொலை வழக்கில் தன்னை போலீசார் தேடுவதாகக் கூறி நெல்லையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னைதிருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை 7 நாள் சிறைக்காவலில் வைக்க நீதிபதி லட்சுமிகாந்தன்உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பாலமுருகன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், பாலமுருகனை தாங்கள் தேடவே இல்லை என்றும், உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைக்க இவன் போலியாகசரணடைந்துள்ளதாகவும் நெல்லை போலீஸார் கூறுகின்றனர்.
ஆலடி அருணா கொலை வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் பட்டியலில் பாலமுருகனின் பெயர் இல்லை என்றும், கொலை நடந்த இடத்தில்கைப்பற்றப்பட்ட செல்போன் பாலமுருகனுக்கு சொந்தமானதல்ல என்றும் நெல்லை காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலமுருகனை சரணடைய வைத்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கிலும் இப்படித்தான் முதலில் போலி குற்றவாளிகள் சரணடைந்தனர். அதைத் தொடர்ந்துஉண்மையான குற்றவாளிகளைப் போலீஸார் வளைத்துப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications