அந்தமானில் நாட்டின் மாபெரும் மீட்புப் பணி
போர்ட்பிளேர்:
![]() |
அந்தமானில் மாபெரும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாடு விடுதலையான பிறகு இதுவரை இந்தியாமேற்கொண்ட மீட்பு- நிவாரண வேலைகளில் மிகப் பெரிய பணி இது தான்.
இந்தியாவின் தரைப் பரப்பில் இருந்து பல்லாயிரம் கி.மீ. தொலைவில் உள்ள அந்தமான், கடலடி நிலநடுக்கம் ஏற்பட்டசுமத்ராவுக்கு மிக அருகே உள்ளதால் பெரும் சேதத்தை சந்தித்துவிட்டது.
சிறு சிறு தீவுகளாக சுமார் 800 கி.மீ. நீளம் கொண்ட அந்தமானில் கப்பல் போக்குவரத்து மூலமாகவே அனைத்துத் தீவுகளும்இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பேய் அலைகளில் அந்தமானில் பல குட்டித் தீவுகள் நீரால்பிளவுபட்டுவிட்டன.
பல குட்டித் தீவுகளில் கிழக்குப் பகுதியில் நுழைந்த கடல் அலைகள் மேற்குப் பக்கமாக வெளியேறியுள்ளன. வழியில் இருந்தவீடுகள், வசித்த மக்களை அப்படியே கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளன.
கார் நிகோபாரில் ஒரு தீவில் குறுக்குவாட்டாக 5 கி.மீ. நீளத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அந்தத் தீவே இரண்டாகபிளவுபட்டு நிற்கிறது.
இந்தத் தீவுகள் சிமெண்டில் ஆரம்பித்து மருந்து வரை டீசல் முதல் துணிகள் வரை அனைத்துக்கும் இந்தியாவின் பிறமாநிலங்களையே நம்பியுள்ளது. இதனால் நிவாரணப் பணிகள் அனைத்தும் இந்தியத் தரைப் பரப்பில் இருந்து மேற்கொள்ளவேண்டிய நிலை.
இந்தப் பணியில் முப்படைகளையும் மத்திய அரசு ஈடுபடுத்தியுள்ளது. இதுவரை 30,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்அந்தமானின் பல்வேறு தீவுகளிலும் தரையிறக்கப்பட்டுள்ளனர். கடறபடையின் பல கப்பல்களும், 36க்கும் அதிகமான ராணுவசரக்கு விமானங்களும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் நிவாரணப் பணியில் இறக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்தில் இருந்து தொடர்ந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்றவண்ணம் உள்ளது. அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி வருகின்றன.
ராணுவ சரக்கு விமானங்களில் புல்டேசர்கள், மரங்களை வெட்டும் கருவிகள், நூற்றுக்கணக்கான ஜெனரேட்டர்கள்,லட்சக்கணக்கான தண்ணீர் பாட்டில்கள், உணவு, தாற்காலிக குடில்கள் அமைக்கும் பொருட்கள் ஆகியவை அந்தமானில்குவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கப்பல்கள், படகுகள் அடைய முடியாத தீவுகளில் உணவுப் பொருட்கள், மருந்துகள், தண்ணீரை வானில் இருந்து வழங்க20 ராணுவ ஹெலிகாப்டர்களும அந்தமானில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
விமானங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளதால் சேதமடைந்த விமான தளங்களை சீரமைக்கும் பணியில்ராணுவப் பொறியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
காட்டுக்குள் 10 வயது குட்டிப் பெண்:
இந் நிலையில் அந்தமானின் கட்சல் தீவில் காட்டுப் பகுதியில் இருந்த தனது வீட்டில் இருந்த அப்பா, அம்மா இருவரையும் அலைஅடித்துச் சென்றுவிட உயிர் தப்பிய அர்மான் ஜாவித் என்ற 10 வயது சிறுமி 4 நாட்களாக மலைப் பகுதி காட்டுக்குள் தனியேஇருந்திருக்கிறாள்.
அவளாகவே தனியே நடந்து நான்கெளரி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். மிக ஆபத்தானகாட்டுப் பகுதியில் இருந்து தனியே நடந்து வந்த அதிர்ச்சியில் இருக்கும் அச் சிறுமிக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டதால், அவள்ஹெலிகாப்டர் மூலம் போர்ட் பிளேர் கொண்டு வரப்பட்டிருக்கிறாள்.
பெற்றோரை இழந்தோடு, காட்டுக்குள் தான் பட்ட சிரமங்களையும் அச் சிறுமி விளக்கி அழுத போது டாக்டர்களும் சேர்ந்துஅழுதது மனதை உருக்குலைத்தது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications