சென்னையில் இன்று மீண்டும் நில அதிர்வு
சென்னை:
![]() |
சென்னையில் இன்று பல இடங்களில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பகல் 2.37 மணியளவில் இந்த அதிர்வை உணர முடிந்தது.
இதையடுத்து பல இடங்களில் மக்கள் வீடுகளையும் அலுவலங்களையும் விட்டு வெளியே ஓடினர்.
கடந்த மாதம் 26ம் தேதி சுமத்ரா அருகே ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தின் தொடர்ச்சியாக லிட்டில் அந்தமானுக்கு மேற்கே இன்று கடலில்ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாகவே சென்னையிலும் லேசான நில அதிர்வு (ஆஃப்டர் ஷாக்) ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.
கடந்த 26ம் தேதி காலையில் நில நடுக்கம் ஏற்பட்ட அடுத்த 2 மணி நேரத்தில் தான் சுனாமி அலை தாக்கியது. இதையடுத்து கடந்த 28ம்தேதியும் இதே போன்ற நில அதிர்வு ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து சுனாமி அலைகள் வருமோ என்ற பயத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ளதங்களது உறவினர்கள், நண்பர்களையும் தொலைபேசிகளிலும் செல்போன்களில் அவசரமாகத் தொடர்பு கொண்டு அங்கிருந்து அகலும்படிபலரும் அறிவுறுத்தியதைப் பார்க்க முடிந்தது.
ஆனால், இது வெறும் ஆப்டர் ஷாக் தான் எனவும், சுனாமி அலையெல்லாம் வராது என்றும் வானிலை ஆய்வு மையம்தெளிவுபடுத்தியுள்ளது.
இன்று லிட்டில் அந்தமான் அருகே கடலில் ஏற்பட்ட இந்த நில அதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications