ஜெ. வீடு முன் போராட்டம்: மீனவர்கள் எச்சரிக்கை
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் கட்டு மரத்துடன் முதல்வர்ஜெயலலிதா வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று கூறி சென்னை மீனவர்கள் சனிக்கிழமை சென்னைசாந்தோம் பகுதியில் போராட்டம் நடத்தினர், பஸ்களையும் சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்தமாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணுச்சாமி அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
இந் நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாந்தோம் அருகில் உள்ள அகிலஇந்திய வானொலி அலுவலகம் முன் திரண்டனர்.
இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை துணைஆணையர் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.
மீனவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால் தங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரைபோக மாட்டோம் என்று மீனவர்கள் கூறி விட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு 8 நாட்களாகியும் எங்களுக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை. அளிக்கவில்லை,தனியார் தொண்டு நிறுவனங்கள்தான் உதவி வருகின்றன. எங்களுக்குரிய நிவாரண உதவிகளை அரசு உடனடியாகவழங்க வேண்டும்.
அதுவரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம். இன்று மாலை 5 மணிக்குள் எங்களுக்கு அரசு சார்பிலான உதவிகள்அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் ஜெயலலிதா வீடு முன் கட்டுமரத்துடன் போராட்டம்நடத்துவோம் என்று மீனவர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்தார் ஆட்சித் தலைவர் கண்ணுச்சாமி.
இன்று மாலை 3 மணிக்கு மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். நாளைக்குள் அனைவருக்கும்நிவாரண உதவிகளை அதிகாரிகள் வழங்கிடுவர்.
தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளும் உங்களுக்கும் கிடைக்கும்.
இதில் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது. அப்படிக் கூறப்படும் தகவல்களை மீனவர்கள் நம்ப வேண்டாம் என்றார்.இதையடுத்து மீனவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications