இந்தியா, இலங்கைக்கு 2 லட்சம் கலாரா வாக்சீன்கள்
ஸ்டாக்ஹோம்:
![]() |
தமிழகம், அந்தமான், இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் காலரா நோய் தடுப்புக்காக 2 லட்சம் வாக்சீன் குப்பிகளை ஸ்வீடன் அரசுஅனுப்பி வைக்கிறது.
சுனாமி தாக்குதலையடுத்து மாபெரும் சுகாரதக் கேடும், கெட்டுப் போன உடல்களால் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் காலரா பரவும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க டுகோரல் எனப்படும் குடிக்கத் தக்க வாக்சீன் குப்பிகளை ஸ்வீடன் அரசு அனுப்புகிறது. உலகிலேயே ஸ்வீடனிடம் மட்டுமேவாயால் உட்கொள்ளும் காலரா தடுப்பு வாக்சீன்கள் பெருமளவில் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்சீன்களை வழங்குமாறு ஐநா சபையும், உலக சுகாதார அமைப்பும் கோரிக்கை விடுத்ததை உடனே ஸ்வீடன் ஏற்றுக்கொண்டுள்ளது. உடனடியாக 2 லட்சம் குப்பிகளை வழங்க முன் வந்துள்ளது.
இவை 10 நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைச் சென்றடையும்.
வெளிநாட்டு என்ஜிஓக்களுக்குத் தடை:
இதற்கிடையே இந்தியாவில் நிவாரணப் பணிகளில் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபட வேண்டாம் என மத்திய அரசுகூறியுள்ளது. வெளிநாட்டு நிதியுதவியையும் நிவாரண உதவியையும் மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சுனாமி பாதித்த பகுதிகளில் குறிப்பாக ராணுவ முக்கியத்துவம் வாயந்த அந்தமானில் வெளிநாட்டு அமைப்புகள் எந்தநிவாரணப் பணியில் ஈடுபட அனுமதிக்கப்படாது என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நாகையில் பிரெஞ்ச் மருத்துவக் குழு:
இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலிருந்து 15 பேர் கொண்ட மருத்துவக் குழு நாகை வந்துள்ளது.
டாக்டர் உல்ப் என்பவர் தலைமையில் வந்துள்ள இந்தக் குழுவில், 6 டாக்டர்கள், 6 செவிலியர்கள் இடம் பெற்றுள்ளனர். இக் குழுவினர்தொற்று நோய் தடுப்பு மருந்துகளுடன் வந்துள்ளனர். மொத்தம் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இக்குழுவினர் கொண்டுவந்துள்ளனர்.
இவர்கள் நாகை மாவட்டத்தில் 5,000 பேருக்கு இவர்கள் தொற்று நோய்த் தடுப்பு சிகிச்சை அளிக்கவுள்ளனர்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!













Click it and Unblock the Notifications