இலங்கை தமிழர்களுக்கு விஜய்காந்த், விஜய் உதவி
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 6 லட்சம் அளித்துள்ளார் நடிகர் விஜய்காந்த். இதே போலநடிகர் விஜய்யும் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதோடு பொது மக்களிடம் நிவாரண நிதி வசூலும் செய்தார்.
விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு கலங்கிப் போய்விட்டேன். என் மன்றத்தின் மூலம் ஆயிரம் மூட்டை அரிசி,குடங்கள், பாத்திரங்கள், பாய், போர்வை வழங்கியுள்ளோம். மேலும் முதல்வரின் நிவாரண நிதிக்கும் ரூ. 10 லட்சம் வழங்கினேன்.
தமிழகத்தை மட்டுமல்ல, இலங்கையில் வாழும் நம் சக தமிழர்களையும் சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்துவிட்டது. அந்த மக்களுக்கு ரூ.6 லட்சத்தை அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்கியிருக்கிறேன்.
இது மிகச் சிறிய உதவி தான். ஆனாலும் இந்த நேரத்தில கை கொடுத்து அந்த மக்களின் சோகத்தில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஜய் உதவி:
அதே போல நடிகர் விஜய்யும் இலங்கை தமிழர் பகுதி நிவாரணத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கியதோடு 200 மூட்டை அரிசியும் அனுப்பிவைத்துள்ளார்.
தமிழக நிவாரணத்துக்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ள அவர் இன்று சென்னையில் கடை வீதியில் பொது மக்களிடம் நிவாரண நிதி திரட்டினார்.நிருபர்களிடம் பேசுகையில், தமிழக நிவாரணப் பணிக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க இருக்கிறோம்.
இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் நம் சக தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும் எனறார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications