விஜயேந்திரரிடம் இன்று மீண்டும் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக விஜயேந்திரரிடம் மூன்றாவது முறையாக இன்றும் காஞ்சிபுரம்தனிப்படை போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர்.
விஜயேந்திரரிடம் இதற்கு முன் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் 3வது முறையாக இன்றும்விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு தனிப்படை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் விஜயேந்திரரும் கைது செய்யப்படக் கூடும் என்றே போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications