அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம்: உபியில் நில அதிர்வு
டெல்லி:
![]() |
அந்தமானை தொடர்ந்து நில நடுக்கங்கள் தாக்கி வருகின்றன. நேற்று இரவு முதல் இன்று காலை 11 மணி வரை 5 முறை நில அதிர்வுகள்தாக்கின.
அதே போல உத்தரப்பிரதேசம்- உத்தராஞ்சல் எல்லையில் நேற்று நள்ளிரவு 2.44 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர்அளவுகோலில் 3.6 என்ற அளவுக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கடந்த 26ம் தேதி இந்தோனேஷிய கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில்அந்தமான் தீவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்று முதல் இப் பகுதியில் தினமும் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
நேற்றிரவு 10.49 மணிக்கும், 11.57 மணிக்கும் கிரேட் நிகோபாரின் தெற்குப் பகுதியில் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்தநிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.
நள்ளிரவு 12.38 மணிக்கு இதே பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஏழு நிமிடங்களில் லிட்டில்அந்தமானின் மேற்குப் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று அதிகாலையும் பின்னர் காலை 11.03 மணிக்கும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனால் அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மக்கள் தொடர்ந்து பீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
மரங்கள் வெட்ட அனுமதி:
இந் நிலையில் அந்தமானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட உதவும் வகையில், அங்கு மரம் வெட்டக் கூடாது என்றுவிதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் இன்று விலக்கியுள்ளது.
நிவாரணப் பணிகளுக்கு உடனடியாக மரங்கள் தேவைப்படுவதால் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் கடல்பகுதியிலிருந்து 1,000 மீட்டர் தூரம் வரையுள்ள பகுதிகளில் மரங்கள் வெட்டக்கூடாது என்றும் கூறியுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!













Click it and Unblock the Notifications