மீன்களில் பாக்டீயா பாதிப்பு இல்லை: நிபுணர்கள்
சென்னை:
![]() |
சுனாமியால் கடல் மீன்களில் எந்தவித பாக்டீரியா பாதிப்பும் ஏற்படவில்லை என சென்னை மாநகராட்சியின் ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி காரணமாக, கடல் மீன்களை சாப்பிட பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். மீன்களில் ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கலாம்என்ற சந்தேகமே இதற்குக் காரணம். இதனால் கடலோரப் பகுதிகளில் மீன் விற்பனை படு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந் நிலையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்ப்பேட்டையில் உள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவனை டாக்டர்கள்குழுவும், வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை கல்லூரியின் நிபுணர் குழுவும் சேர்ந்து சென்னை கடலோரப் பகுதியில் மீன்களைசேகரித்து அதை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஆய்வின் முடிவை அறிக்கையாக மாநகராட்சியிடம் நிபுணர் குழு சமர்ப்பித்துள்ளது. அந்த ஆய்வின்படி, சென்னையில்தண்டையார்பேட்டை, மெரீனா, ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் கடல் மீன்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த மீன்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையிலான பாக்டீரியாக்களான விப்யோ, சீஜெல்லா, சல்மோனெல்லா, பொட்டுலினம்ஆகியவை காணப்படவில்லை. காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியாவும் இந்த மீன்களில் காணப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையர் கே.மணிவாசன் கூறுகையில், புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களில்தான் இந்தஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே புதிதாக பிடிக்கப்பட்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவேபொதுமக்கள் பயப்படாமல் புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களை தாராளமாக சாப்பிடலாம் என்று தெரிவித்தார்.
இருப்பினும் பழைய மீன்களில் ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்குமா, இருக்காதா என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம்தெளிவுபடுத்தவில்லை.
மீன்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்ட வதந்தியால் சென்னையில் கடந்த 10 நாட்களில் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!













Click it and Unblock the Notifications